சென்னை தரமணியில் இருக்கிற தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
சென்னை தரமணியில் இருக்கிற தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் Multi Tasking Staff வேலைக்கு 34 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இந்தப் பணிக்கு ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை ஊதியம் அளிக்கப்படும். 35 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். பணிக்கு தேர்வு செய்யப்படுவோர் வேலை செய்யும் இடத்தில் தூய்மையை பராமரித்தில், ஆவண பரிமாற்றம், ஆவண பாதுகாப்பு, மெயில் அனுப்புதல், ஜெராக்ஸ் எடுத்தல், அலுவலகத்தில் தினமும் நடக்கும் பணிக்கான டைரியை பராமரித்தல் உள்ளிட்ட பிற பணிகளில் நியமிக்கப்படுவார்கள்.
www.nitttrc.ac.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜூலை 17.
ஆன்லைனில் விண்ணப்பித்த படிவத்தினை தரவிறக்கம் செய்து தேவையான ஆவணங்களை இணைத்து, ஜூலை 31ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
இந்த விண்ணப்பங்களை அனுப்பும்போது விண்ணப்பத்தின் மீது “APPLICATION FOR THE POST OF Multi Tasking Staff” என எழுதி அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி
The Director,
National Institute Of
Technical Teachers Training and
Research, Tharamani, Chennai – 600 113
மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள 94451 41467, 044 22545436 ஆகிய எண்களையும், nitttrcadmin@nitttrc.edu.in எனும் இ-மெயில் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.