25 உழவர் சந்தைகளில் சிறுதானிய கூழ் வகைகள், சிற்றுண்டிகள், மூலிகை சூப் வகைகளுடன் தொன்மை சார் உணவகங்கள் அமைக்க அரசாணை.
சிறுதானிய உணவுகள், புவிசார் குறியீடு பெற்ற உணவுப் பொருட்கள் மட்டுமே விற்பனை. உணவகத்திற்கு இலக்கிய நயம் சார்ந்த பெயர் சூட்டப்பட்டு, பலகையில் எழுதிட உத்தரவு.
தொன்மை சார் உணவகம்: முதற்கட்டமாக, கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, மதுரை, நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், தேனி, திருநெல்வேலி, திருப்பூர், திருச்சி வேலூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட உள்ளது.