நகத்தின் நிறத்தை பார்த்தே நம் உடலில் உள்ள நோயை கண்டறியலாம்!

கை, கால் விரல்­களில் உள்ள நகங்­க­ளைச் சீராக வெட்டி அவற்­றைப் பல்­வேறு வண்ண நகப்­பூச்­சு­க­ளால் அலங்­க­ரிப்­பது பல­ருக்­கும் பிடிக்­கும். ஆனால் நகங்­களில் தானா­கவே தோன்­றும் நிற வேறு­பா­டு­களை அலட்­சி­யப்படுத்­தக்­கூ­டாது என்­கின்­ற­னர் வல்­லு­நர்­கள்

1.இளஞ்­சி­வப்பு நிறத்­தில் இருக்­கும் கைவி­ரல் நகங்­களில் ஒரு சிறு வளர்­பிறை வடி­வம் இருந்­தால் உட­லில் ரத்த ஓட்­டம் நன்­றாக இருப்­பதை அது குறிக்­கும்.

2.நகங்­கள் நீல நிற­மாக இருந்­தால் ஆஸ்­துமா, நுரை­யீ­ரல் தொடர்­பான நோய்­க­ளுக்­கான அறி­கு­றி­யா­கக் கரு­தப்­ப­டு­கிறது. ரத்­தத்­தின் சிவப்­ப­ணுக்­களில் ‘ஆக்­ஸி­ஜன்’ எனப்­படும் உயிர்­வா­யு­வின் அளவு குறை­வ­தும் இதற்­குக் கார­ணம்.

3.வைட்­ட­மின் B-12 பற்­றாக்­குறை, கல்­லீ­ரல் பாதிப்பு, சிறு­நீ­ரக நோய், அதீத பயம் போன்­ற­வற்­றால் நகம் கறுப்­பா­கக்­கூ­டும். ஒரு­வ­கைப் புற்­று­நோ­யா­லும் நகம் இவ்­வாறு கறுப்­பாக மாறும் என்று கூறப்­ப­டு­கிறது.

4.நகம் வெளுத்­துக் காணப்­பட்­டால் ரத்த சோகை­யாக இருக்­கலாம் என்றும் கருதப்படுகிறது.

5.’ஸிங்க்’ எனும் துத்­த­நா­கச் சத்து குறைந்­தால் நகத்­தில் வெள்­ளைப் புள்­ளி­கள் தோன்­றும். மூட்­டு­வ­லிப் பிரச்­சினை வரப் போகிறது என்ற எச்­ச­ரிக்­கை­யா­க­வும் இதைக் கரு­தலாம்.

6.அதி­கம் புகை­பி­டிப்­ப­வர்­க­ளுக்­கும் நீரி­ழிவு அல்­லது கல்­லீ­ரல் நோய் ஏற்­பட்­டோ­ருக்­கும் நிண­நீர் மண்­ட­லத்­தில் பிரச்­சினை உள்­ள­வர்­க­ளுக்­கும் நகங்­கள் மஞ்­சள் நிறத்­துக்கு மாறக்­கூ­டும். சில நேரங்­களில் பூஞ்­சைத் தொற்­றா­லும் நகம் மஞ்­சள் நிறத்­தில் காட்­சி­ய­ளிக்­கலாம்.

7.ரத்த ஓட்­டத்­தில் சிக்­கல் இருந்­தால் நகம் ஊதா நிறத்­தில் காணப்­படும் என்­றும் இதய நோய், உயர் ரத்த அழுத்­தம் உள்­ளோ­ருக்கு நகம் சிவந்து காணப்­படும் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

8.நீரி­ழிவு நோயா­ளி­க­ளுக்கு ரத்த நாளங்­கள் பல­வீ­ன­ம­டைந்து உட­லுக்­குள் ரத்­தக் கசிவு ஏற்­பட்­டி­ருந்­தால் கைவி­ரல் நகங்­கள் சிவப்பு நிறத்­தில் இருக்­கும்.

9.கைவி­ரல் நகங்­களில் வெள்­ளைப் புள்­ளி­கள் இருந்­தால் உடல் நலம் குன்றி இருப்­ப­தற்கு அடை­யா­ளம். கால்­சி­யம், வைட்­ட­மின், இரும்­புச்­சத்­துக் குறை­பா­டு­கள் இருந்­தால், நகம் உடைந்தோ குறுக்கே கோடு­க­ளு­டனோ காணப்­படும். நகத்­தில் புள்ளி புள்­ளி­யாக குழி­கள் காணப்­பட்­டால் ‘சோரி­யா­சிஸ்’ எனப்­படும் சரும நோய் ஏற்­ப­டக்­கூ­டும்.

10.இதய நோய், நுரை­யீ­ரல் நோய் உள்­ள­வர்­க­ளுக்கு கைவி­ரல் நகங்­கள் குவிந்து, பருத்து, பள­ப­ள­வென்று இருக்­கும்; இது `க்ளப்­பிங்’ எனப்­படும்.

11.நகங்­களில் கிடை­மட்­டக் கோடு­கள் அதி­கம் தென்­பட்­டால் நிமோ­னியா போன்ற தொற்­றின் அறி­கு­றி­யாக இருக்­க­லாம். மருத்­து­வ­ரி­டம் சென்று பரி­சோ­திப்­பது நல்­லது.

12.தொடர்ந்து நகப்­பூச்­சு­க­ளைப் பயன்­ப­டுத்­து­வ­தா­லும் தர­மற்ற நகப்­பூச்­சு­க­ளா­லும் நகங்­க­ளின் நிறம் மாறு­வ­துண்டு.

13.எனவே நகங்­கள் நிறம் மாறி­யி­ருப்­பது குறித்த ஐயம் எழுந்­தால் மருத்­து­வரை அணு­கி ஆலோசனை பெறுவதே சிறந்தது.