நடிகை பூஜா ஹெக்டே தற்கொலை முயற்சி…? விமர்சகருக்கு வக்கீல் நோட்டீஸ்…!

உமைரின் இந்த டுவீட்டால் பூஜா ஹெக்டேவின் ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். உங்களுக்கு வேறு ஒன்றும் கிடைக்கவில்லையா? இப்படி பொய் பிரசாரத்தில் நேரத்தை செலவிடுகிறீர்களே என்று விமர்சித்தனர்

 மும்பை, தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமூடி, விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் போன்ற திரைப்படங்களில் நடித்து உள்ளார். இதையடுத்து தமிழில் பெரியளவில் வாய்ப்புகள் கிடைக்காததால் தற்போது தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

2021 வரை தொடர் வெற்றிகளை பூஜா ஹெக்டே கொடுத்தார். 2022ல் கதாநாயகியாக நடித்த நான்கு படங்கள் வெளியாகின. ஆனால் அவை தோல்வியை தழுவின. பிரபாசுடன் நடித்த ராதேஷ்யாம் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அது தோல்வி படமாக அமைந்தது. அதன்பிறகு வந்த பீஸ்ட் படம் ஓப்பனிங் வசூல் இருந்தாலும் அவருக்கு ஆவரேஜ் படமாக அமைந்தது. அதன்பிறகு வந்த ஆச்சார்யா படம் படுதோல்வி அடைந்தது.

நடிகர் மகேஷ் – இயக்குனர் திரிவிக்ரமின் எஸ்எஸ்எம்பி28 படத்தில் பூஜா நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்த படத்தில் இருந்து பூஜா விலகி விட்டதாக கூறப்படுகிறது.

உஸ்தாத் பகத் சிங்கில் பவன் கல்யாண் ஜோடியாக பூஜா நடிப்பார் என கூறப்பட்டது. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. பாலிவுட்டில் தொடர் தோல்விகளால் பூஜா ஹெக்டேவை மற்ற ஹீரோக்கள் ஏற்று கொள்வதில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பாலிவுட் விமர்சகர் உமைர் சந்து பூஜா ஹெக்டே தற்கொலைக்கு முயன்றதாக டுவீட் செய்து இருந்தார். கடந்த இரண்டு வாரங்களாக பூஜா கடும் மன உளைச்சலில் இருந்து வருவதாகவும் அவர் தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும் அவரது குடும்பத்தினர் அதனை கண்டுபிடித்து காப்பாற்றியதாகவும் கூறி இருந்தார்.

 உமைரின் இந்த டுவீட்டால் பூஜா ஹெக்டேவின் ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். உங்களுக்கு வேறு ஒன்றும் கிடைக்கவில்லையா? இப்படி பொய் பிரசாரத்தில் நேரத்தை செலவிடுகிறீர்களே என்று விமர்சித்தனர். இதை தொடர்ந்து பூஜா ஹெக்டே சார்பில் அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

 ஆனால் அதனை உமைர் பெருமையுடன் தனது டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார். தன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்பது போன்ற மனப்பான்மையில் பதிவிட்டு உள்ளதாக சமூகவலைதளத்தில் விமர்சனம் செய்து வருகின்றனர். அவருக்கு இதுவரை கீர்த்தி சனோன் உள்பட பல நடிகைகள் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். உமைர் சந்து மிகவும் பிரபலமான பாலிவுட் விமர்சகர். மேலும் வெளிநாட்டு சென்சார் போர்டு உறுப்பினராகவும் உள்ளார். பயில்வான் ரங்கநாதன் போல் பாலிவுட் நடிகர்கள் நடிகைகள் குறித்து பரபரப்பான தகவல்களை வெளியிடுவார். பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை விஷயங்களை வெளியிட்டு அடிக்கடி சர்ச்சையில் சிக்கி கொள்வார்.