நடிகை லதாவின் 50 வருட திரை வாழ்க்கை – கோல்டன் விசா வழங்கி கெளரவித்த ஐக்கிய அமீரகம்

நடிகை லதாவின் 50 வருட திரை வாழ்க்கையை கெளரவிக்கும் வகையில் அவருக்கு கோல்டன் விசா வழங்கி இருக்கிறது ஐக்கிய அமீரகம்.

இந்தியாவின் திரைத்துறையைச் சார்ந்த பல முன்னணி நடிகர்களுக்கு அவர்களை கெளரவிக்கும் வகையில் கோல்டன் விசா வழங்கியிருக்கிறது ஐக்கிய அமீரகம். அந்த வகையில், சஞ்சய் தத், ஷாருக்கான், ஊர்வசி ரவுதலா உள்ளிட்ட பாலிவுட் நடிகளைகளுக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல தென் இந்தியாவில் மம்மூட்டி, மோகன்லால், பிருத்விராஜ், துல்கர்சல்மான், பார்த்திபன், மீரா ஜாஸ்மின், த்ரிஷா, அமலாபால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி, மீனா, வெங்கட் பிரபு, கமல்ஹாசன், விகரம், யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்ட திரை பிரபலங்களுக்கு கோல்டன் விசா வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது நடிகை லதாவின் திரையுலக 50 ஆண்டுகள் சாதனையை கெளரவிக்கும் வகையில் அவருக்கு கோல்டன் விசா வழங்கி இருக்கிறது ஐக்கிய அமீரகம்.