நம்பர் ஒன் பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த எலான் மஸ்க் !
ட்விட்டர் நிறுவனத்தின் சீஇஓ எலான் மஸ்க் மீண்டும் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆனார்.
2022ம் ஆண்டு எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் சரிவை சந்தித்த காரணத்தினால் உலகன் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து மஸ்க் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். அதேபோல பெர்னார்ட் அர்னால்டினுடைய எல்விஎம்ஹெச் பங்குகள் உயரத் தொடங்கியதால் அவர் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார்.
இந்நிலையில் நேற்று பெர்னார்ட் அர்னால்டின் எல்விஎம்ஹெச் நிறுவனத்தின் பங்குகள் சரிவை சந்தித்தது. சுமார் 2.6% சரிந்த நிலையில் பெர்னார்ட் அர்னால்ட்டின் சொத்து மதிப்பில் ஒரே நாளில் சுமார் 11 பில்லியன் டாலர்களை இழந்துள்ளார்.
அதனால், தற்போது ப்ளூம்பெர்க் நிகழ் நேர உலக பணக்காரர்கள் பட்டியலில் 192 பில்லியன் டாலர்களுடன் முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார் எலான் மஸ்க். இரண்டாம் இடத்தில் உள்ள பெர்னார்ட் அர்னால்டின் சொத்து மதிப்பு 187 பில்லியன் டாலர்களாக உள்ளது.