நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு.!

நாடாளுமன்றத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மக்களவை மதியம் 2 மணி வரையும், மாநிலங்களவை 12 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற மக்களவை பிற்பகல் 2 மணி வரையும் மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

 நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை 20 ஜூலை 2023 10:33 AM நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு தயார் எனவும் பிரதமர் மோடிதெரிவித்துள்ளார்.

மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன் எதிர்க்கட்சிகள் ஆலோசனை மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னர் எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில்காங்கிரஸ், தி.மு.க., ஆம் ஆத்மி, சிபிஐ, ம.தி.மு.க., திரிணமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி), சிவசேனா (உத்தவ் அணி) , சமாஜ்வாதி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மணிப்பூர் சம்பவம் – நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு நோட்டீஸ் மணிப்பூரில் உள்ள பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக விவாதிக்க கோரி நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், பல்வேறு கட்சிகள் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளன. மணிப்பூர் கலவரத்தின் போது, பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற வீடியோ வெளியானதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரில் பழங்குடியின பெண்களுக்கு நடந்த கொடூர சம்பவத்திற்கு எதிர்க்கட்சிக கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சம்பந்தப்பட்ட நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.