நான்காவது காலாண்டு முடிவுகளை வெளியிடும் முக்கிய நிறுவனங்கள்!

பஜாஜ் ஆட்டோ, HDFC, Mahindra Holiday, Nippon, Tata Steel உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் நான்காவது காலாண்டு முடிவுகல் இன்று வெளியாக இருக்கிறது.

HDFC Asset Management Company, Dalmia Bharath, Bajaj Auto, AU Small Finance Bank, Mahindra Holiday, Mahindra CIE, Nippon, Tata Consumer, Tata Steel Long Products, Rallis India, Mahindra Life ஆகிய நிறுவனங்களின் ஆகியவற்றின் 4வது காலாண்டு முடிவுகள் இன்று வெளியாக உள்ளது.

உள்நாட்டு வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜ் ஆட்டோ, முந்தைய நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் எதிர்பார்த்ததை விட சிறந்த லாபத்தை வழங்கியது. நிறுவனத்தின் நிகர லாபம் 22.8 சதவீதம் அதிகரித்து ரூ. 1,491.42 கோடியாக இருந்தது. மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர் விலைகள் உயர்ந்ததன் விளைவாக இந்த ஏற்றம் காணப்பட்டது.

FMCG நிறுவனமான நெஸ்லே இந்தியா அதன் 2023-24 காலாண்டில் முதல் காலாண்டில் வருவாய் அறிக்கையை இன்று வெளியிட உள்ளது. நெஸ்லே நிறுவனம் அதன் வருவாய் மற்றும் லாப வரம்புகளில் இரட்டை இலக்க வளர்ச்சியை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் வளர்ச்சி முக்கியமாக விலை உயர்வு மற்றும் பால் பொருட்கள் விற்பனை சிறப்பாக இருப்பதால் வருவாய் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நாட்டின் மிகப்பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் ஒன்றான ஹெச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்டும் அதன் 4வது காலாண்டு முடிவுகளை இன்று வெளியிட உள்ளது. 2022ம் ஆண்டின் டிசம்பரில் முடிவடைந்த மூன்று மாதங்களில், சொத்து மேலாண்மை நிறுவனம், அதன் வரிக்குப் பிந்தைய லாபம் 3 சதவீதம் உயர்ந்து ரூ.369.5 கோடியாகப் பதிவாகியுள்ளது.

டாடா கன்ஸ்யூமர் நிறுவனம் மார்ச் காலாண்டின் வருவாய் அறிக்கையை இன்று வெளியிட உள்ளது. இதையடுத்து திங்களன்று அதன் பங்குகள் 4.63 சதவீதம் உயர்ந்து ரூ. 732.45 ஆக முடிந்தது. 2022ம் ஆண்டு டிசம்பர் காலாண்டில் அதன் நிகர லாபம் 25.6 சதவீதம் உயர்ந்து ரூ.364.43 கோடியாக இருந்தது. இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலகட்டத்தில் ரூ. 290.07 கோடியாக இருந்தது.

மஹிந்திரா அதன் இரண்டு வணிக பிரிவுகளின் முடிவுகளை வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதாவது மஹிந்திரா CIE மற்றும் மஹிந்திரா ஹாலிடே.

மஹிந்திரா CIE பங்குகள் திங்களன்று 2.67% குறைந்து ரூ.362.90 ஆக முடிந்தது. அதேசமயம், மஹிந்திரா ஹாலிடே பங்குகள் திங்களன்று 0.33% குறைந்து ரூ. 299.35 ஆக இருந்தது. மற்ற இரண்டைப் போலவே, மஹிந்திரா லைஃப் நிறுவனத்தின் பங்குகளும் திங்களன்று 2.26% உயர்ந்து ரூ. 375.00 ஆக முடிந்தது.

2022ம் ஆண்டு டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில், மஹிந்திரா CIE தனது விற்பனையில் 34 சதவீதம் உயர்ந்து ரூ. 2246.84 கோடியாகப் பதிவாகியுள்ளது. நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 80.23 கோடியுடன் ஒப்பிடும்போது ரூ. 657.81 கோடியாக இருந்தது.

2021 ஆம் ஆண்டில் ரூ. 6765.17 கோடியுடன் ஒப்பிடுகையில், 2022ம் ஆண்டில் டிசம்பரில் ரூ. 136.17 கோடி நிகர இழப்பைப் பதிவு செய்துள்ளது.

இந்நிறுவனங்களில் காலாண்டு முடிவுகள் பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கத்தை தீர்மானிக்குமா என்பதை பார்க்கலாம்!

  • Yield Engineering Systems ₹150 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம். 300 வேலைவாய்ப்புகள்.

    அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக 17 நாட்கள் பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். ஆகஸ்ட். 27ம் தேதி இரவு சென்னையில் இருந்து  விமானம் மூலம் புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலின் துபாய் வழியாக நேற்று (ஆகஸ்ட் – 29ம் தேதி) அதிகாலை அமெரிக்கா…


  • அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்:

    அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ரூ.900 கோடிக்கு ஒப்பந்தங்கள்: 4,100 பேருக்கு வேலைவாய்ப்பு அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நோக்கியா, பேபால், ஈல்டு இன்ஜினீயரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப், இன்ஃபிங்ஸ், அப்ளைடுமெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் ரூ.900 கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 4,100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதல்வர்ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். சான் பிரான்சிஸ்கோ…


  • 78வது சுதந்திர தின விழா : டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு

    இந்தியாவின் 78- வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி நாளை காலை 7.30 மணிக்கு தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார். இது அவரது 11-வது சுதந்திர தின உரை ஆகும். இந்த ஆண்டுக்கான சுதந்திர தின விழா, ‘வளர்ந்த பாரதம்’ என்ற கருப்பொருளில் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே சுதந்திர தின…