நாராயணமூர்த்தியின்மகள் அக்‌ஷதா மூர்த்திக்கு ரூ.68 கோடி வழங்கும் இன்ஃபோசிஸ்

அக்‌ஷதாமூர்த்தி 3,89,57,096 இன்ஃபோசிஸ்பங்குகளைவைத்துள்ளார். அதாவதுநிறுவனத்தின் 1.07 சதவீதபங்குகளைவைத்திருக்கிறார்.

நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் நிறுவனம், 2022-23ம் ஆண்டின் இறுதி டிவிடெண்டை இன்று வழங்குகிறது. இன்ஃபோசிஸ் பங்குகளை வைத்திருக்கும் தகுதி வாய்ந்த பங்குதாரர்கள் அனைவருக்கும் டிவிடெண்ட் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதனால் ஜூன் 2ம் தேதியான இன்றைய வர்த்தகத்தின் இன்ஃபோசிஸ் பங்கு கூடுதல் கவனம் பெறும்.

இன்ஃபோசிஸ் நிறுவனம் 2022-23 நிதியாண்டிற்கான அதன் தகுதியான பங்குதாரர்களுக்கு ஒரு பங்கிற்கு ரூ. 17.50 இறுதி டிவிடெண்டாக அறிவித்துள்ளது. இன்ஃபோசிஸின் இயக்குநர்கள் குழு, இறுதி டிவிடெண்ட் செலுத்துவதற்கு தகுதியான பங்குதாரர்களை இறுதி செய்வதற்கான பதிவுத் தேதியாக ஜூன் 2யை நிர்ணயித்துள்ளது.

இன்ஃபோசிஸ் டிவிடெண்ட் 2023

பங்குதாரர்களுக்கு இறுதி டிவிடெண்ட் வழங்குவது குறித்து இந்திய பங்குச் சந்தைகளுக்குத் தெரிவிக்கும் வகையில், இன்ஃபோசிஸ் மார்ச் மாதம் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது. அதன்படி ஏப்ரல் 12-13 இயக்குநர் குழு கூட்டத்தில், மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டிற்கான டிவிடெண்ட் வழங்க உள்ளதாகவும், ஒரு ஈக்விட்டி பங்கு வைத்திருக்கும் ஒவ்வொரு பங்குதாரர்களுக்கு ரூ.17.50 இறுதி டிவிடெண்டாக வழங்கப்படும் என தெரிவித்திருந்தது.

இன்ஃபோசிஸ் டிவிடெண்ட் ரெக்கார்டு தேதி

இன்ஃபோசிஸ் நிறுவனம் டிவிடெண்ட் வழங்குவதற்கான ரெக்கார்டு தேதி ஜூன் 2 என்றும், நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தது. இன்ஃபோசிஸ் நிறுவனம் வழங்கும் டிவிடெண்ட் தொகை ஜூன் 3ம் தேதி அதன் முதலீட்டாளர்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் கூறியிருந்தது.