அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் பிரம்மாண்ட சூரிய அஸ்தமன நிகழ்வு நடைபெற்றது. மக்கள் அதனை ஆச்சரியத்துடன் கண்டுகளித்தனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரம் வானுயர்ந்த கட்டடங்கள் நிறைந்து காணப்படும் பிரம்மாண்ட நகரம். இந்த நகரத்தில் தான் பிரபலமன மன்ஹாட்டன் கட்டடங்கள் உள்ளன. இந்தக் கட்டடங்களுக்கு இடையில் நேற்று மிகப் பிரம்மாண்ட சூரிய அஸ்தமன நிகழ்வு நடைபெற்றது.
நியூயார்க் வீதிகளில் குவிந்த மக்கள் அதனை ரசித்து புகைப்படம் எடுத்து பகிர்ந்து கொண்டாடியுள்ளனர். அளவில் மிகப்பெரியதாக இருந்த சூரியப் பந்து அஸ்தனமத்தின் போது சிவப்பு ஆரஞ்சு நிறத்தில் பிரம்மாண்டமாக காட்சியளித்தது. பூமி எப்போதும் 23 டிகிரி அச்சில் சாய்வாகதான் பூமி சூழல்கிறது. இவ்வாறு சாய்வாக சுழலும்போது உலக நாடுகளில் சில பகுதிகளில் சூரியனின் அஸ்தமனங்களும், உதயங்களும் பிரமாண்டமாக கண்கொள்ளா காட்சியாக அமைவது உண்டு என வானியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றன. இதே மாதிரியான சூரிய அஸ்தமனம் அடுத்த மாதம் மீண்டும் நிகழும் என்கிறார்கள்.