பைஜூஸ் நிறுவனத்தின் தலைவர் தற்போது துபாய் வீட்டில் இருந்துக்கொண்டு மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் முக்கியமான முதலீட்டாளர்களிடம் புதிய முதலீட்டை ஈர்க்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். முதலீட்டு குறித்து பேசும் போது பைஜூ ரவீந்திரன் நிறுவனத்தை காப்பாற்றும் தனது முயற்சி குறித்து பேசும் போது கண்ணீர் விட்டுள்ளார்.
முதலீட்டாளர்கள் முன்னிலையில் பேசும் போது அவர்களுடன் இருந்தவர்கள் பைஜூ ரவீந்திரன் கண்ணீர் விட்டு அழுததை பகிர்ந்துள்ளனர். பைஜூ ரவீந்திரன் தற்போது 1 பில்லியன் டாலர் முதலீட்டை திரட்டும் முயற்சியில் துபாயில் உள்ளார். அமெரிக்க முதலீட்டு நிறுவனங்கள் பைஜூள் நிர்வாக கணக்குகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைக்கும் வேளையில், பைஜூ ரவீந்திரன் மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் முதலீட்டாளர்களிடம் முதலீட்டை திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் கல்வி சேவை நிறுவனமாக இருக்கும் பைஜூஸ் நிறுவனத்தின் பெங்களூர் அலுவலகததில் ஏப்ரல் மாதம் வருமானவரி துறை அதிகாரிகள் செய்த சோதனையில் சில ஆவணங்கள், லேப்டாப் ஆகியவற்றை கைப்பற்றியதை தொடர்ந்து வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் சில முக்கியமான பிரச்சனை எதிர்கொண்டார்.
இந்த பிரச்சனைக்கு மதியில் பீக் XV பார்ட்னர்ஸ்-ன் ஜிவி ரவிஷங்கர், Prosus நிறுவனத்தின் Russell Dreisenstock, Chan Zuckerberg Initiative நிறுவனத்தின் Vivian Wu ஆகியோர் பைஜூஸ் நிர்வாக குழுவில் இருந்து ஓரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக வெளியேறினர். இது கடந்த சில மாதங்களாக பைஜூஸ் நிறுவனத்தில் உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட வந்த நிலையில் தற்போது பெங்களூர் மற்றும் நொய்டாவிஸ் உள்ள மிகப்பெரிய அலுவலகத்தை தற்போது காலி செய்யத் தொடங்கியுள்ளது.
சமீபத்தில் பைஜுஸ் ஊழியர் ஒருவர், தனக்கான ஊக்கதொகையை மூத்த அதிகாரிகள் அளிக்காமல் இருப்பது குறித்து வெளியான வீடியோ இணையத்தில் பெரிய அளவில் வைரலானது. இப்படி அடுத்தடுத்து பிரச்சனைகள், வீழ்ச்சியை மட்டுமே சந்தித்த வரும் பைஜூஸ் தலைலர் பைஜூ ரவீந்திரன் தற்போது துபாய் வீட்டில் வசதித்து வருகிறது.