நிலவில் கட்டடம் :சீனாவின் அடுத்தகட்ட திட்டம்

நிலவில் கட்டடம் :சீனாவின் அடுத்தகட்ட திட்டம்

நம் அண்டை நாடான சீனா, உலகிலேயே முதன் முதலாக நிலவின் மறு பக்கத்தில் ‘சாங்கி – 4’ என்ற விண்கலத்தை தரையிறக்கியதோடு நிலவில் பருத்தி செடியை வளர்த்து சீனா சாதனை படைத்தது
இந்நிலையில், சீனாவின் 100க்கும் மேற்பட்ட சீன விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், வூஹான் நகரில் சமீபத்தில் ஒரு கூட்டம் நடத்தினர்.

இதில், அடுத்த ஐந்து முதல், 10 ஆண்டுகளுக்குள் நிலவில் கட்டுமானங்களை அமைப்பது குறித்து திட்டமிட்டுள்ளனர் . நிலவில் உள்ள மண்ணை எடுத்து செங்கல் செய்து, அதன் வாயிலாக அங்கு கட்டடம் கட்டுவதற்காக பிரத்யேக ‘ரோபோ’ ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

நிலவில் தங்கி விஞ்ஞானிகள் நீண்ட கால ஆய்வுகளை மேற்கொள்வதற்கு ஒரு கட்டடத்தை உருவாக்குவது அவசியம்.என்றும் இது, எதிர்காலத்தில் உறுதியாக நிறைவேற்றப்படும். நிலவின் மறுபக்கத்தில் இருந்து மண் மாதிரிகளை எடுத்து வர, 2025ல் ‘சாங்கி – 6’ விண்கலம் அனுப்பப்படும் எனவும்

நிலவில் கட்டடம் கட்டும் திட்டத்துடன் 2028ல் ரோபோவுடன் ‘சாங்கி – 8’ விண்கலம் செலுத்த திட்டமிடபட்டுள்ளதாக சீன விஞ்ஞானி டிங் லியூன் கூறினார்.