நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே ராஜினாமா!

கூட்டணி கட்சிகளிடையே ஒருமித்த கருத்து நிலவவில்லை என்பதால் நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே ராஜினாமா செய்துள்ளார்.

நெதர்லாந்து நாட்டில் சுதந்திர ஜனநாயக கட்சியின் தலைமையிலான கூட்டணி கட்சி ஆட்சி செய்து வருகிறது. அந்தக் கட்சியின் தலைவரான மார்க் ரூட்டே நெதர்லாந்தின் பிரதமராக இருக்கிறார். இதனிடையே, புலம்பெயர்ந்தோர் தொடர்பான மசோதா நெதர்லாந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா தொடர்பாக கூட்டணி கட்சிக்குள் ஆதரவும் எதிர்ப்பும் நிலவி வந்தது.

இந்நிலையில், மசோதா விவகாரத்தில் கூட்டணி கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டு வந்த நிலையில் நெதர்லாந்து பிரதமர் பதவியை மார்க் இன்று ராஜினாமா செய்தார். பிரதமர் பதவியை மார்க் ராஜினாமா செய்த நிலையில் 150 தொகுதிகளை கொண்ட நாடாளுமன்றத்திற்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.