நமது உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் பல்வேறு வகையான நோய் பாதிப்புகள் வரக்கூடும். அதிலும் குறிப்பாக பருவ சீசன் வந்துவிட்டால் அடிக்கடி உடல்நலம் சார்ந்த பிரச்சினைகள் வந்துவிடும். எனவே, பருவமழை காலங்களில் உடல்நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்திட நாம் சில உணவுகளை எடுத்து கொள்வது முக்கியம். குறிப்பிட்ட வகை உணவு பொருட்கள் பருவமழை காலங்களில் நமது உடலை எதிர்ப்பு சக்தியுடன் வைக்க உதவும். மேலும், உடலில் ஏற்படும் அலர்ஜிகளில் இருந்தும் நம்மை காக்கும். இந்த பதிவில் பருவமழை காலங்களில் ஏற்படும் அலர்ஜி சார்ந்த பிரச்சினைகள் தடுக்க உதவும் உணவு பொருட்களை பற்றி பார்க்கலாம்.
இஞ்சி :
நமது சமையல் அறையில் இருக்க கூடிய மிக முக்கிய பொருள் இஞ்சி. இதில் பல மருத்துவ நன்மைகள் உள்ளன. இதை தொடர்ந்து நாம் சாப்பிட கூடிய உணவில் சேர்த்து வருவதன் மூலம் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். மேலும், உடலில் ஏற்படும் அழற்சி, அலர்ஜி போன்ற பாதிப்புகளை தடுக்க முடியும். பருவ காலங்களில் இஞ்சியை உணவில் சேர்த்து கொள்வதால் சளி, பிரச்சினை, தொண்டை வறட்சி, கண்களில் ஏற்படும் பிரச்சனை போன்றவை சரிசெய்யப்படும்.
சிட்ரஸ் பழங்கள் :
வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் வகை பழங்களை சாப்பிடுவதன் மூலம் உடலில் எதிர்ப்பு சக்தி கூடும். மேலும், பருவ காலங்களில் மருத்துவர்கள் சிட்ரஸ் மாத்திரைகளை சளி மற்றும் இரும்பலுக்கு பரிந்துரைப்பதுண்டு. இது மழைக்காலத்தில் ஏற்பட கூடிய பிரச்சனைகளை தடுப்பதோடு அவற்றின் பாதிப்பையும் குறைக்கிறது. எனவே, எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை பருவமழை காலங்களில் சாப்பிட்டு வரலாம்.
மஞ்சள் :
எல்லோரது வீடுகளிலும் இருக்க கூடிய மிக அற்புதமான ஒரு உணவு பொருள் என்றால் அது மஞ்சள் தான். இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், குடல் சார்ந்த பிரச்சினைகள், மூட்டு பிரச்சினை, சர்க்கரை நோய் போன்ற பலவற்றில் இருந்து நம்மை காக்கும். எனவே, மஞ்சளை தினசரி உணவில் சேர்த்து கொண்டால், நன்மை பயக்கும்.
வெங்காயம் :
வெங்காயத்தில் உள்ள குசேர்ட்டின் என்கிற பையோபிளேவனாயிட், உங்களை பருவகால நோய் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும். மேலும், இதில் உள்ள ஆண்டி ஆக்சிடென்ட், அழற்சி எதிர்ப்பு தன்மை எண்ணற்ற நோய்களில் இருந்து காக்கும். இது எதிர்ப்பு சக்தியை தருவதோடு, செரிமானத்திற்கும் உதவுகிறது. மேலும், குடல் அமைப்பை ஆரோக்கியமாக பார்த்து இது உதவுகிறது.
தக்காளி :
வைட்டமின் சி நிறைந்த பழங்களில் தக்காளியும் ஒன்று. இதை உணவில் சேர்த்து கொண்டால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தக்காளியில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ், லைக்கோபின் உடலில் உண்டாகும் வீக்கத்தை தடுக்கும். மேலும், உணவில் தக்காளியை சேர்த்து கொள்வதால் அலர்ஜி சார்ந்த பாதிப்புகளும் நீங்கும்.