நேற்றும் பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கிய நிலையில், வார இறுதிநாளான இன்று உயர்வுடன் தொடங்கியுள்ளது.
மும்பை பங்குச்சந்தை வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 195 புள்ளிகள் உயர்வடைந்து 63,113 ஆக இருந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 57 புள்ளிகள் உயர்ந்து 18,746 ஆக இருந்தது.
நண்பகல் 12.45 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 200.26 புள்ளிகள் உயர்வடைந்து 63,117.89 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 61.40 புள்ளிகள் உயர்ந்து 18,750.05 ஆக இருந்தது.
தனிப்பட்ட நிறுவனங்களின் பங்குகளை பொறுத்தவரை ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐடிசி, ஹெச்டிஎஃப்சி, டைட்டன் கம்பெனி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், பஜாஜ் ஃபின்சர்வ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பஜாஜ் பைனான்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எல் அண்ட் டி, டாடா ஸ்டீல், கோடாக் மகேந்திரா பேங்க், நெஸ்ட்லே இந்தியா, ஆக்ஸிஸ் பேங்க், இன்டஸ்இன்ட் பேங்க், மாருதி சுசூகி, ஐசிஐசிஐ பேங்க், எம் அண்ட் எம், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன
மேலும், டெக் மகேந்திரா, பாரதி ஏர்டெல், ஏசியன் பெயின்ட்ஸ், டிசிஎஸ், விப்ரோ, பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஹெச்எல் டெக்னாலஜிஸ், டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.