பங்குச்சந்தை நிலவரம் – நேற்று ஏற்றம், இன்று சரிவு

பங்குச்சந்தை நேற்று 300 புள்ளிகள் உயர்ந்த நிலையில் இன்று சரிவுடன் தொடங்கியது…

நேற்று பங்குச்சந்தை சென்செக்ஸ் சுமார் 300 புள்ளிகள் உயர்ந்த நிலையில் இன்று காலை சரிவுடனே தொடங்கியது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 100 புள்ளிகள் சரிந்த நிலையில் 62,243 புள்ளிகளுடன் தொடங்கியது.

தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 25 புள்ளிகள் சரிந்த நிலையில், 18,376 புள்ளிகளுடன் தொடங்கியது. இன்னும் சில நாட்களுக்கு பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் தான் காணப்படும் என பங்குச்சந்தை ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.