பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வியாழக்கிழமை அன்று பங்குச் சந்தை வர்த்தகத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வியாழக்கிழமை அன்று பங்குச் சந்தை வர்த்தகத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்ட உள்ளது, இதன் மூலம் எவ்விதமாந வர்த்தகம் செய்யப்படாமல் பங்கு முதலீட்டு சந்தை மொத்தமாக மூடப்படும்.
இதேபோல் வியாழக்கிழமை பாண்ட், கரன்சி மற்றும் அந்நியச் செலாவணி ஆகிய வர்த்தக சந்தைகளும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது மட்டும் அல்லாமல் முன்பு அறிவிக்கப்பட்டு உள்ள விடுமுறை தினத்தையும் மாற்றியுள்ளது.
இந்திய பங்குச் சந்தை செவ்வாய்கிழமை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் விடுமுறை தேதி மாற்றம் குறித்த அறிவிப்பையும் விளக்கத்தையும் கொடுத்துள்ளது. இதேவேளையில் மகாராஷ்டிரா மாநிலம் ஈத் விடுமுறை தேதியை திங்கள்கிழமை மாற்றியதை தொடர்ந்து பங்குச் சந்தை இந்த மாற்றத்தை செய்துள்ளது.
Eid al-Adha: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வியாழக்கிழமை அன்று பங்குச் சந்தை வர்த்தகத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்ட உள்ளது, இதன் மூலம் எவ்விதமாந வர்த்தகம் செய்யப்படாமல் பங்கு முதலீட்டு சந்தை மொத்தமாக மூடப்படும். இதேபோல் வியாழக்கிழமை பாண்ட், கரன்சி மற்றும் அந்நியச் செலாவணி ஆகிய வர்த்தக சந்தைகளும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது மட்டும் அல்லாமல் முன்பு அறிவிக்கப்பட்டு உள்ள விடுமுறை தினத்தையும் மாற்றியுள்ளது. இந்திய பங்குச் சந்தை செவ்வாய்கிழமை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் விடுமுறை தேதி மாற்றம் குறித்த அறிவிப்பையும் விளக்கத்தையும் கொடுத்துள்ளது. இதேவேளையில் மகாராஷ்டிரா மாநிலம் ஈத் விடுமுறை தேதியை திங்கள்கிழமை மாற்றியதை தொடர்ந்து பங்குச் சந்தை இந்த மாற்றத்தை செய்துள்ளது. Recommended Video China -Taiwan war | America-விடம் மாட்டிக்கொண்ட China.. பதற்றத்தில் Taiwan முன்பு அனைத்து தரப்பினரும் ஜூன் 28 ஆம் தேதி அதாவது புதன் கிழமை விடுமுறை நாளாக அறிவித்த வேளையில், பிறை தெரிவதை கணக்கிட்டு ஜூன் 29 அதாவது வியாழக்கிழமை விடுமுறையாக மாற்றி அறிவிக்கப்பட்டு உள்ளது. மகாராஷ்டிர அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து பங்குசந்தைகளும் விடுமுறை தினத்தை மற்றியுள்ளது. பத்திர வர்த்தகங்களைத் தீர்க்கும் கிளியரிங் கார்ப் ஆஃப் இந்தியா லிமிடெட் (சிசிஐஎல்) விடுமுறை மாற்றப்பட்டதாக பத்திர வர்த்தகர்களுக்கு அறிவித்துள்ளது. அந்நிய செலாவணி சந்தை வியாழக்கிழமையும் மூடப்படும். இதேபோல் தேசிய பங்குச் சந்தை ஜூன் பியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் ஒப்பந்தங்களுக்கான காலாவதி தேதி ஜூன் 29ல் இருந்து ஜூன் 28-க்கு மாற்றப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே சமயம் பக்ரீத் பண்டிகையையொட்டி ஜூன் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பெலாப்பூர், ஜம்மு, கொச்சி, மும்பை, நாக்பூர், ஸ்ரீநகர், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் உள்ள வங்கிகள் ஜூன் 28-ஆம் தேதி மூடப்படும். அதேபோல், புதுடெல்லி, ஸ்ரீநகர், சண்டிகர், இம்பால், ஜெய்ப்பூர், அகமதாபாத், அகர்தலா, பெங்களூரு, ஐஸ்வால், பனாஜி, பாட்னா, சென்னை, டேராடூன், ஹைதராபாத், ராஞ்சி, ஜம்மு, கொல்கத்தா, லக்னோ, ஷில்லாங், சிம்லா, போபால், குவஹாத்தி மற்றும் கான்பூர் ஆகிய இடங்களில் ஜூன் 29-ஆம் தேதி வங்கிகள் மூடப்படும்.