பத்திரிகையாளர்கள், விவசாயிகளின் ட்விட்டர் கணக்குகளை முடக்க அழுத்தம் கொடுத்தது இந்திய அரசு – ட்விட்டரின் முன்னாள் சிஇஓ ஜேக் டார்ஸி

டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் மற்றும் மத்திய அரசை விமர்சனம் செய்த பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்குகள் குறித்த தகவல்களை பகிறுமாறு இந்திய அரசு அழுத்தம் கொடுத்தாக தெரிவித்திருக்கிறார் ட்விட்டரின் முன்னாள் சிஇஓ ஜேக் டார்ஸி

பிரேக்கிங் பாயின்ட்ஸ் என்ற யூடியூப் நிறுவனத்துக்கு ஜூன் 12ம் தேதி ட்விட்டரின் முன்னாள் சிஇஓ ஜேக் டார்ஸி பேட்டி அளித்திருந்தார். அப்போது அவரிடம் எந்தெந்த நாடுகளில் இருந்து என்ன மதிரியான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன? என்று ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு, “டெல்லியில் நடந்த மாபெரும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்ட முக்கியமான போராளிகள் மற்றும் மத்திய அரசை தொடர்ந்து விமர்சனம் செய்துவந்த பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்குகளின் தகவல்களை கேட்டு மத்திய அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தது.

அவர்களது கணக்குகளை முடக்கவும் கோரிக்கை வைத்தது. அப்படி அவர்கள் கேட்ட தகவல்களை கொடுக்கவில்லை என்றால், இந்தியாவில் ட்விட்டரை தடை செய்வோம் என்றும், ட்விட்டர் ஊழியர்களின் வீடுகளில் ரெய்டு நடத்துவோம் என்று மிரட்டினார்கள். ஆனால் அவர்களது மிரட்டளுக்கு நாங்கள் அஞ்சவில்லை. அவர்கள் சொன்னது போலவே எங்கள் ஊழியர்களின் வீடுகளில் ரெய்டு நடத்தினார்கள். இதுதான் இந்தியா என்ற ஜனநாயக தேசம் என்று நினைத்துக்கொண்டோம்.” என்றார். ஜேக் டார்ஸியின் இந்தக் குற்றச்சாட்டு அரசியல் தளத்தில் பெரும் விசர்சனங்களை எழுப்பியுள்ளது.