பல ஆண்டுகள் கழித்து தர்மசாலாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டி – ரசிகர்கள் உற்சாகம்!

இன்றைய டெல்லி கேபிடல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணி இடையே நடைபெறும் ஐபிஎல் போட்டி 10 வருடங்கள் கழித்து தர்மசாலாவில் மைதானத்தில் நடக்க இருக்கிறது.

இன்று நடைபெறும் 64-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸை இடையே நடக்க இருக்கிறது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு 19,000 பார்வையாளர்கள் கொண்ட தர்மசாலா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்றைய போட்டி நடைபெற இருக்கிறது.

10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிக்கான ஏற்பாடுகளை இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்கம் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளது. இந்த சீசனின் 64வது மற்றும் 66வது ஐ.பி.எல். போட்டிகளை காண மைதானம் தயாராக உள்ளது. ரசிகர்களும் உற்சாகமாக காத்திருக்கின்றனர். பாதுகாப்பிற்காக மைதானம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 1,200 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.