பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!! 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு தேதி மாற்றம்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!! 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு தேதி மாற்றம்.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வானது கடந்த மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி முடிவடைந்த நிலையில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வருகிற மே மாதம் 5 ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மே 7 ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுவதால் மே 5 ஆம் தேதி முடிவு வெளியிடபட்டால் மாணவர்களின் கவனம் சிதற அதிக வாய்ப்புகள் இருக்கும் என்பதால் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியிடும் தேதி மாற்றியமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்துரையாடிய பின்னர் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேதி வெளியாகும் என்றும் தெரிவித்தார்.

  • / சினிமா/Leema Rose.SP சென்னை: பிரசாந்த் நடித்துள்ள ‘அந்தகன்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குர்ரானா, தபு உள்ளிட்டோர் நடித்த படம் ‘அந்தாதூன்’. 2018-ல் வெளியான இப்படம் அந்த ஆண்டின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக மாறியது. ‘அந்தாதூன்’ படத்தை தமிழில் ரீமேக் செய்துள்ளார் பிரசாந்தின் தந்தை தியாகராஜன். படத்தை அவரது ஸ்டார் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்துள்ளார். நாயகியாக ப்ரியா…

    பிரசாந்த் நடித்துள்ள ‘அந்தகன்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் !

  • / வணிகம்/Leema Rose.SP மும்பை: பங்குச் சந்தை வர்த்தகத்தில் நேற்று கடும் சரிவு காணப்பட்டது. சென்செக்ஸ் 738.81 புள்ளிகள் சரிந்து 80,604 ஆகவும், நிஃப்டி 269.95 புள்ளிகள் சரிந்து 24,530 ஆகவும் குறைந்துள்ளது. வர்த்தக தொடக்க நேரத்தில் சென்செக்ஸ் 81,587 ஆக உயர்ந்துபுதிய உச்சம் தொட்டது. ஆனால்,வர்த்தக முடிவில் அது 80,604 ஆக சரிந்தது. இதனால், முதலீட்டாளர்களுக்கு ரூ.8 லட்சம் கோடிஇழப்பு ஏற்பட்டது.வரும் 23-ம்தேதி மத்திய பட்ஜெட் அறிவிக்கப்பட உள்ள நிலையில், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பதால் பங்குச்…

    பங்குச் சந்தை வர்த்தகத்தில் நேற்று கடும் சரிவு காணப்பட்டது!

  • / உலகம்/Leema Rose.SP வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் நேற்று 1,400 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 3,000-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் தாமதமாக இயக்கப்பட்டன. மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினையால் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், ஆஸ்திரேலியா, தைவான், ஐக்கிய அரபு அமீரகம், தென்கொரியா, அயர்லாந்து, துருக்கி, கனடா உள்பட பல்வேறு நாடுகளில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. அமெரிக்காவின் யூனைடெட் ஏர்லைன்ஸ், டெல்டா ஏர்லைன்ஸ், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்கள் விமான…

    மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் நேற்று 1,400 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன!