பாலைவனத்தில் கட்டப்பட்ட கண்ணுக்கு தெரியாத கண்ணாடி கட்டடம் – சவுதி அரேபியாவில் வினோத முயற்சி

சவுதி அரேபியா பாலைவனத்தில் கட்டப்பட்டுள்ள கண்ணாடி கட்டடம் பலரையும் கவர்ந்திருக்கிறது.

சவுதி அரேபியாவி ஹெக்ரா என்ற புகழ்பெற்ற இடத்தில் உள்ள பாலைவனத்தில் கண்ணுக்கே தெரியா அளவுக்கு வினோதமான முறையில் கண்ணாடி கட்டடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்திற்கு மராயு என பெயர் வைத்துள்ளனர். அதாவது அரபு மொழியில் அதற்கு ‘எதிரொளி’ என சொல்கிறார்கள்.

இத்தாலிய வடிவமைப்பு நிறுவனமான ஜியோ பார்மா ஸ்டுடியோ மற்றும் பிளாக் இன்ஜினியரிங் ஆகியவற்றின் கூட்டு முயற்சியினால் இந்த நவீன கண்ணாடி கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. வெப்பம் அதிகமான பாலைவனத்தில் இது எப்படி சாத்தியம் என பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறனர்.

பாலைவனத்தின் வெப்பத்தை தாங்கும் அளவுக்கு, புதிய வகையான கண்ணாடி தாமிரத்தினால் செய்து, மராயா கட்டடத்தின் கண்ணாடிக்கு சிறப்பு பூச்சு ஒன்று உருவாக்கப்பட்டது. இது மணல் புயல்கள், அதிக வெப்பநிலை மற்றும் இயற்கை சீற்றங்களை சமாளிப்பதற்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்திற்குள் நட்சத்திர உணவகம், இசை நிகழ்ச்சிகள் என அனைத்து வசதிகளும் உள்ளன.