பிசினஸ் ஜாம்பவான் முகேஷ் அம்பானி!

பிசினஸ் ஜாம்பவான் முகேஷ் அம்பானி!

இந்தியாவின் நவீன தொழில்துறையின் முன்னோடியாக திகழ்ந்தவர் திருபாய் அம்பானி. கச்சா எண்ணெய், பெட்ரோ கெமிக்கல் தொழில்துறையில் அவரின் வரலாற்றுச் சாதனைகள் இன்றும் பல தொழிலதிபர்களுக்குப் பாடம். அப்படியான ஒரு குடும்பத்தில் இருந்து வந்தவர் தான் முகேஷ் அம்பானி. 1957, ஏப்ரல் 19ம் தேதி மும்பையில் பிறந்த முகேஷ் அம்பானி இன்று தனது 66வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

பெட்ரோ கெமிக்கல் துறையில் பட்டம் பெற்ற முகேஷ் அம்பானி, அவரது தந்தை திருபாய் அம்பானியிடம் இருந்து தொழில் கற்றுக்கொண்டார். 2002ம் ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் நிர்வாக குழுவில் இணைந்த அவரின் உழைப்பினால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பல மடங்கு வளர்ச்சி அடைந்தது. அதுமட்டுமல்ல, தொலைதொடர்பு துறை, ரீடெய்ல் வர்த்தகம், நியூ எனர்ஜி, ஊடகம், டிஜிட்டல் சேவை என பல துறைகளில் தடம் பதித்திருக்கிறார்.

2014ம் வருடத்தில் 18.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்களின் பட்டியலில் 40வது இடத்தில் இருந்து முகேஷ் அம்பானி, 2022ம் ஆண்டு போபர்ஸின் தரவுகளின்படி 90.7 பில்லியன் டாலர் சொத்துமதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்கிறார் முகேஷ் அம்பானி. கடந்த பத்தாண்டுகளில் அவரது அரசு வளர்ச்சி உலக பணக்காரர்களையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.

போர்ப்ஸ் பில்லியனர் – 2023 பட்டியலில், மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையாளர், ஐபிஎஸ் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை பெற்று மைக்ரோசாப்ட் ஸ்டீவ் பால்மரை பின்னுக்கு தள்ளி உலகின் பணக்கார விளையாட்டு உரிமையாளர் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.