பிரதமர் மோடி, மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் அகில இந்திய வானொலியில் ‘மன் கி பாத்’ என்ற பெயரில் உரையாற்றும் நிகழ்வின் 100வது நாள் நிகழ்ச்சி இன்று ஐ.நா-வில் நேரடி ஒலிபரப்பு செய்யப்படுகிறது.
‘மன் கி பாத்’ என்ற பெயரில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று அகில இந்திய வானொலியின் மூலமாக மக்களிடையே உரையாற்றும் நிகழ்ச்சியின் 100வது நாள் சிறப்பு நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு ஒலிபரப்பு ஆக இருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இந்தியில் உரையாற்ற இருக்கிறார். அதனை இந்தியாவின் 63 மொழிகளில் மொழிபெயர்த்து நாடு முழுவதும் ஒலிபரப்பு செய்யப்பட இருக்கிறது.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் அவையின் தலைமையகத்தில் ஒலிபரப்ப இருப்பதாக ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூத்துக்குழு ட்விட்டர்ல் தெரிவித்துள்ளது.