பிரதீக் அகர்வால் முக்கியமான அப்டேட்…HCL மிகவும் எச்சரிக்கை உடன் செயல்படுகிறது

ஹெச்சிஎல் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் சந்தை முதலீட்டாளர்களை கவர்ந்துள்ள நிலையில் முன்னணி பத்திரிக்கைக்கு ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் சிஇஓ சி.விஜயகுமார் மற்றும், தலைமை நிதியியல் அதிகாரி பிரதீக் அகர்வால் முக்கியமான அப்டேட்-ஐ கொடுத்துள்ளனர்.

2023 ஆம் ஆண்டு எங்களுக்கு ஒரு அற்புதமான ஆண்டாக அமைந்துள்ளது என ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் சிஇஓ சி.விஜயகுமார் ஈடி-நவ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். ஒரு நிறுவன அளவில் 13.7% நிலையான நாணய வளர்ச்சியை வழங்கியுள்ளோம், மேலும் எங்கள் சேவை வணிகம் நிலையான நாணயத்தில் 15.8% வளர்ச்சி அடைந்துள்ளது என்பதையும் தெரிவித்துள்ளார்.

இந்த வளர்ச்சி அனைத்தும் இயற்கையான வளர்ச்சியாகும். இரண்டாவதாக எங்கள் நிறுவனத்தின் வருவாய் அளவு 1,00,000 கோடி ரூபாய் அளவை தாண்டியுள்ளது. இது முக்கியமான சாதனை மட்டும் அல்லாமல் 2,25,000 ஹெச்சிஎல் ஊழியர்களுக்கும் இது ஒரு பெருமைக்குரிய விஷயமாகவும் மைல்கல் ஆகவும் உள்ளது என இந்த பேட்டியில் ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் சிஇஓ சி.விஜயகுமார் தெரிவித்தார்.

ஹெச்சிஎல் நிறுவனம் மிகவும் குறைந்த மார்ஜின் அளவில் ஆர்டர்களை பெற்று வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது ஹெச்சிஎல் தலைமை நிதியியல் அதிகாரி பிரதீக் அகர்வால் எங்கள் வணிகத்தில் போட்டியின் தீவிரம் எப்போதும் அதிகமாகவே இருக்கும். இனி வரும் காலத்தில் போட்டியின் தன்மை அதிகரிக்குமே தவிர குறையாது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

இந்தியாவில் ஐடி துறை மட்டுமே முழுமையாக வெளிநாட்டி வர்த்தகம் வர்த்தகம் செய்து வருகிறது. இதேபோல் இந்திய ஐடி துறையில் இருக்கும் பெரும்பாலான நிறுவனங்கள் வெளிநாட்டு சந்தைக்கே அதிகப்படியான வர்த்தகத்தையம், சேவைகளையும் அளித்து வருவதால் போட்டி கட்டாயம் கடுமையாக தான் இருக்கும்.

ஹெச்சிஎல் டெக் நிறுவனத்தின் மொத்த வருவாயில் சுமார் 95 சதவீதத்திற்கும் அதிகமானவை உலகளாவிய வாடிக்கையாளர்களிடம இருந்து வருகிறது. எனவே, எங்களுடைய வர்த்தகத்தில் போட்டித்தன்மை வாய்ந்தாக இருப்பதில் எவ்விதமான ஐயமும் இல்லை.

இதேவேளையில் ப்ராஜெக்ட்-களுக்கு விலை நிர்ணயம் செய்வதில் எவ்விதமான மாற்றும் இல்லை, நிலையான விலையை கொண்டே வர்த்ககம் செய்து வருகிறோம். தற்போதைய வர்த்தக சூழ்நிலையில் பெரிய மார்ஜின் கிடைப்பது சந்தேகம் தான், ஆனாலும் வரும் காலத்தில் லாபம் அளவீடுகளில் எச்சரிக்கை உடன் கட்டமைப்பை உருவாக்குவது மிகவும் முக்கியமானதாக உள்ளது என்பதையும் ஹெச்சிஎல் தலைமை நிதியியல் அதிகாரி பிரதீக் அகர்வால் ஒப்புக்கொண்டார்.