எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு “பிரபஞ்சன் போற்றுதும்” என்ற தலைப்பில் அவரது நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
எழுத்தாளர் பிரஞ்சன் அவர்களின் பிறந்தநாளான ஏப்ரல் 27ம் தேதியன்று, அவரது நினைவைப் போற்றும் வகையில் “பிரபஞ்சன் போற்றுதும்” என்ற தலைப்பில் சென்னை கே.கே.நகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸில் பிரபஞ்சன் அரங்கத்தில் பிறந்தநாள் நினைவுக்கூடுகை நிகழ்வு நாளை நடைபெற இருக்கிறது. அதற்கான அழைப்பினை வெளியிட்டிருக்கிறது பிரபஞ்சன் அறக்கட்டளை.
இதில் எழுத்தாளர் ந.முருகேசபாண்டியன், புதுவை இளவேனில், கவிஞர் மு.பாலசுப்பிரமணியன், ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, எழுத்தாளர் பாரதி பாலன், பேராசிரியர் பா.ரவிக்குமார், இயக்குநர் கவிதா பாரதி, கவிஞர் உமாமோகன் உள்ளிட்டோர் கலந்துகொள்ள இருக்கின்றனர். நிகழ்வு மாலை 6 மணிக்கு தொடங்கும்.