பிரபல இந்தி நடிகர் உடல்நலக்குறைவால் காலமானார்

பிரபல இந்தி நடிகர் ஜெயந்த் சவார்கர் (வயது 87) உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.

மும்பை,

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பிரபல இந்தி நடிகர் ஜெயந்த் சவார்கர் (வயது 87). இவர் இந்தி, மராத்தி மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஆரம்ப காலத்தில் மேடைக்கலைஞராக இருந்த ஜெயந்த் பின்னர் மராத்தி, இந்தி மொழிப்படங்களில் நடித்து பிரபலமானார். குறிப்பாக ஹரி ஓம் விதாலா, 66 சதாசிவ், சிங்கம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

இந்நிலையில், வயது முதிர்வு மற்றும் ரத்த அழுத்தம், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 10 நாட்களுக்கு முன் ஜெயந்த் தானேவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கபப்ட்டு வந்த நிலையில் ஜெயந்த் இன்று காலை 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பாலிவுட் திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.