பிரபல இயக்குனர், நடிகர் மனோபாலா மரணம்.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரும் நகைச்சுவை நடிகருமான மனோபாலா உடல்நலக்குறைவால் காலமானார்.

சிறந்த இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பெயர் பெற்ற மனோபாலா கிட்டத்தட்ட 20 திரைப்படங்களை தமிழில் இயக்கி இருக்கிறார். அவர் இயக்கிய ஊர்க்காவலன், ஆகாய கங்கை உள்ளிட்ட திரைப்படங்கள் மக்களின் மனதில் இன்றும் நிலைத்திருக்கிறது. இயக்குனர் பாரதிராஜாவிடம் திரைப்பாடத்தைக் கற்ற அவர், தமிழ் சினிமாவில் இயக்குனராக மட்டுமல்லாது தயாரிப்பாளர் நகைச்சுவை நடிகர் என வளம் வந்துகொண்டிருந்தார்.

கடந்த ஜனவரி மாதம் இருதய நோய் காரணமாக அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், உடல்நலன் தேறி திரைப்படங்களில் நடித்து வந்தார். பின்னர் அவருக்கு கல்லீரல் பிரச்னை ஏற்பட்டதால் வீட்டிலேயே சிகிச்சை எடுத்து வந்திருக்கிறார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர காலமானார்.