புக்கர் பரிசின் இறுதி பட்டியலில் இடம்பெற்ற இந்திய வம்சாவளி பெண் எழுத்தாளர்!

உலகப் புகழ்பெற்ற புக்கர் பரிசின் இறுதி பட்டியலில் இந்திய பெண் எழுத்தாளரின் நாவல் இடம் பெற்றிருக்கிறது!

இங்கிலாந்தில் சிறுகதை, நாவல் உள்ளிட்ட புத்தகங்களுக்கு 1969ம் ஆண்டில் இருந்து புக்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் பதிப்பிக்கப்பட்ட புத்தகங்களுக்கு புக்கர் விருது அறிவிக்கப்படுவதோடு, 50 ஆயிரம் டாலர் பரிசு வழங்கப்படுகிறது.

வருடம்தோறும் வழங்கப்படும் இந்த விருதுக்கு தேர்வுக்குழு புத்தகங்களை பரிசீலனை செய்து இறுதிப்பட்டியலை தயாரிக்கும். அப்படி 2023ம் ஆண்டுக்கான இறுதிப் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சேத்னா மாரூ எழுதிய ‘வெஸ்டர்ன் லேன்’ என்ற புத்தகம் புக்கர் விருது பெறும் புத்தகங்களுக்கான இறுதிப் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது.

கோபி என்ற 11 வயது சிறுமியின் கதையாகும். ஸ்குவாஷ் விளைாட்டு மீதான சிறுமியின் ஆர்வம் மற்றும் குடும்பத்துடனான அவளது பிணைப்பைச் சுற்றி கதை நகர்கிறது. இந்த நாவல் தற்போது அனைவரிம் கவனத்தையும் பெற்றிருக்கிறது.