புதிய வந்தே பாரத் இரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

மத்திய பிரதேசத்தில் 5 புதிய வந்தே பாரத் இரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

இந்திய இரயில்வேயின் புதிய சேவைகளில் வந்தே பாரத் இரயில் சேவை கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை 18 வந்தே பாரத் இரயில் சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் புதிய 5 வந்தே பாரத் ரெயில் சேவைகளை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். போபாலில் உள்ள ராணி கமலாபதி ரெயில் நிலையத்தில் 5 வந்தே பாரத் ரெயில்களை தொடங்கி வைத்தார். இதன் மூலம் நாட்டில் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

மத்திய பிரதேசத்தின் போபால்- ஜபல்பூர், கஜூராஹோ- போபால்- இந்தூர், கோவா- மும்பை, ஹதியா- பாட்னா மற்றும் தார்வாட்- பெங்களூரு ஆகிய வழித்தடங்கள் இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் தொடங்கி வைத்தார். மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், கோவா, ஜார்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநில முதல்-மந்திரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ராணி கம்லாபதி ரெயில் நிலையத்தில் வந்தே பாரத் ரெயிலில் பயணித்த பள்ளி மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.