புதுச்சேரியில் +2 தேர்வு முடிவுகள் வெளியீடு – 92% மாணவர்கள் தேர்ச்சி

புதுச்சேரில் +2 தேர்வு முடிவுகள் வெளியீடு. கடந்த ஆண்டைவிட 3.6% தேர்ச்சி குறைவு

புதுச்சேரி மாநிலத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.67 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு அரசின் கல்வி பாடத்திட்டத்தை புதுச்சேரி மாநில பள்ளிக்கல்வித்துறை பின்பற்றி வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 129 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 14 ஆயிரத்து 359 மாணவர்கள் +2 தேர்வு எழுதி இருந்தனர். அதற்கான முடிவுகளை புதுச்சேரி அரசு இன்று வெளியிட்டிருக்கிறது.

அதில், 92.67% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 3.6% குறைவு. அரசு பள்ளிகளை பொருத்தவரை 85.38% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 56 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகப்படியாக வணிகவியல் பாடத்தில் 157 மாணவர்கள் 100 க்கு 100 எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.