புற்றுநோய் வராமல் தடுக்கும் தர்பூசணி – Seasonal Fruits Series

அந்தந்த பருவகாலங்களில் கிடைக்கும் பழங்களும் அதன் மருத்துவ குணங்களும்!

கோடைக்காலம், குளிர்காலம், மழைக்காலம் என அந்தந்த பருவகாலங்களில் கிடைக்கும் பழங்களுக்கு அவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கிறன. அந்த வகையில் தற்போது திரும்பிய பக்கமெல்லாம் சாலையோரங்கள் விற்பனை செய்யப்படும் தர்பூசணிக்கு எண்ணற்ற மருத்துவ குணங்கள் இருக்கின்றன.

தர்பூசணியில் இருக்கு லைக்கோபீன் என சொல்லப்படும் ஆன்டிஆக்ஸிடெண்ட் மனித உடலில் உள்ள நுரையீரல், கர்பப்பை, பெருங்குடல் உள்ளிட்ட இடங்களில் ஏற்படும் புற்றுநோயை தடுக்கும். கண்களை பாதுகாக்கும் என்கிறார்கள்.

அதேபோல தர்பூசணியில் இருக்கு லூடீன் என சொல்லப்படும் ஆன்டிஆக்ஸிடெண்ட் மாலைக்கண் நோய், குளுக்கோமா ஆகியவற்றில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. தர்பூசணியில் 90 சதவிகிதம் நீர் சத்து இருப்பதால், கோடைக்காலங்கள் நம் உடலில் இருந்து வியர்வை மூலமாக நீர் வெளியேறும்போது, அதனை சமன் செய்ய தர்பூசணி பெரும் உதவியாக இருக்கிறது.

தர்பூசணியில் வைட்டமின் சி சத்து இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கோடைகாலங்களில் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. மேலும் வைட்டம் சி சத்து ஆஸ்துமா பிரச்னை ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறது.

கோடைக்காலங்களில் மிக முக்கியமான பிரச்னை உடல் உஷ்ணத்தினால் மலச்சிக்கல் பிரச்னை ஏற்படுவது. தர்பூசணியில் நீர் சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க உதவுகிறது. கோடை காலங்களில் ஏற்படும் பெரும்பான்மையான நோய்களில் இருந்து நம்மை காக்கும் மிகப்பெரிய பணியை தர்பூசணி செய்கிறது.