பெண்களை விட ஆண்கள் வழுக்கையால் அதிகம் பாதிக்கப்பட என்ன காரணம்..? சிகிச்சை முறைகள் என்னென்ன .?

35 வயதிற்குள், 66 சதவீத ஆண்கள் முடி உதிர்தல் பிரச்சனையை அனுபவித்திருப்பார்கள். மேலும் 50 வயதிலிருந்து, 85 சதவீத ஆண்கள் முடி படிப்படியாக மெலிந்து போவதை அனுபவிக்கின்றனர்.

ஆண்களை இளமையாகவும், அழகானவர்களாகவும் காட்டுவதில் முடிக்கு முக்கிய பங்கு உண்டு என்று சொன்னால் அதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. சுருக்கமாக சொன்னால் ஆண்களின் பெர்சனாலிட்டியை தீர்மானிப்பது , முக அழகும்தான். ஆனால், வயது மற்றும் இதர காரணங்களால் ஆண்களுக்கு பல வகைகளில் வழுக்கை ஏற்படுகிறது.

ஆண்களை இளமையாகவும், அழகானவர்களாகவும் காட்டுவதில் முடிக்கு முக்கிய பங்கு உண்டு என்று சொன்னால் அதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

குளித்து முடித்து தலையை துடைக்கும்போது டவளில் கொத்து, கொத்தாக சிலருக்கு முடி வருகிறது. தூங்கி எழுந்ததும் தலையணையில் முடி கொட்டிக் கிடக்கிறது என்று பல சமயங்களில் நம் மனதை கவலைகள் ஆட்கொள்ளும்.

சிலருக்கு முன் தலையில் வழுக்கை வரும், சிலருக்கு முன் பகுதியில் முடி இருப்பினும் நடுப்பகுதியில் வழுக்கை வரும். சிலருக்கு முடியின் அடர்த்தி குறைந்து தலைப்பகுதி நேரடியாக கண்களுக்கு புலப்படும். முதன் முதலில் தலையில் வழுக்கை தென்படுவதை ஒரு ஆண் உணருகின்றபோது மனம் உடைந்து போவதுடன், பாதுகாப்பற்ற நபராக உணரத் தொடங்குகிறார்.

சிலர் வழுக்கையை வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டு, இருக்கின்ற கொஞ்ச முடியையும் வழித்துவிட்டு, பளபளவென மொட்டை பாஸ் போல வலம் வருவதை விரும்புகின்றனர். இருப்பினும் இத்தகைய முடிவுக்கு வருவதற்கு முன்னால் நாம் பல வகைகளில் முயற்சி செய்து பார்க்கலாம்.

ஆண்களுக்கான வழுக்கை இயல்பானதா?
நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் இது மிக பரவலான விஷயமாகவே இருக்கின்றது. இந்தியாவில் 21 வயது முதல் 61 வயது வரையிலான ஆண்களில் 63.22 சதவீதம் பேருக்கு வழுக்கை இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முடி மெலிந்து போவது மற்றும் இடைவெளி அதிகரிப்பது போன்ற அறிகுறிகள் 15 வயதில் இருந்தே தொடங்கி விடுகிறதாம். நான்கில் ஒரு ஆண் இந்த அறிகுறிகளை 21 வயதுக்கு முன்பாகவே உணரத் தொடங்கி விடுகிறார்.

முக்கிய காரணம் என்ன?
மரபு ரீதியான காரணங்கள் மற்றும் ஹார்மோன்கள் தான் வழுக்கைக்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது. ஆண்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் வம்சாவளி வழியாக உங்களுக்கு கடத்தப்படும் பட்சத்தில் உங்களுக்கு முடி உதிர்வு உறுதி தான்.

புகைப்பிடித்தல், ஸ்ட்ரெஸ் அளவு அதிகரிப்பது, போதுமான ஊட்டச்சத்து உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது போன்ற காரணங்களாலும் ஆண்களுக்கான வழுக்கை ஏற்படலாம். அதிக டென்ஷன், தூக்கமின்மை போன்ற காரணங்களால் முடி உதிர்தல் அதிகரிக்கும்.

வழுக்கைக்கு எப்படி சிகிச்சை எடுப்பது?
முடி உதிர்வை நீங்கள் உணரத் தொடங்கிய உடனேயே இதற்கான சிகிச்சை முறைகளை தொடங்கி விடலாம். இன்றைய காலகட்டத்தில் முடி உதிர்வை தடுக்கவும், மீண்டும் முடி வளர்ச்சியை ஏற்படுத்தவும் எண்ணற்ற மருந்துகள், ஜெல் போன்றவை உள்ளன. மருத்துவரை ஆலோசித்து, அவற்றை வாங்கிப் பயன்படுத்துவதன் மூலமாக தீர்வு பெறலாம்.

நவீன முறையான எஃப்.யு.இ சிகிச்சையே தற்போது அதிகமாகச் செய்யப்படுகிறது. தலையின் பின் பகுதியில் இருந்து தேவையான அளவு முடி எடுக்கப்பட்டு தலையின் முன் பகுதியில் (Implant) பதிக்கப்படும். தலை முழுவதும் வழுக்கையாக உள்ளவர்களுக்குத் தாடி மற்றும் நெஞ்சுப் பகுதியில் இருக்கும் முடியைக் கொண்டு மாற்று சிகிச்சை செய்யப்படுகிறது.

மாற்று சிகிச்சைக்குப் பிறகு வழங்கப்படும் மருந்து மாத்திரைகளையும் கவனிப்பையும் சரியாகச் செய்தால் நோய்த்தோற்று போன்ற பாதிப்புகள் ஏற்படாது.