பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு 3 ஆண்டுகள் சிறை…

தமிழ்நாட்டின் சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஸ் தாஸ் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி இருக்கிறது நீதிமன்றம்.

கடந்த 2021 பிப்ரவரி 21-ம் தேதி அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அவரது பாதுகாப்புக்கு பணிகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தா சட்டம்-ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ், பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் மற்றும் அப்போதையை டிஜிபி திரிபாதியிடம் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படியில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், பாதிக்கப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரியின் புகார் தொடர்பாக ராஜேஷ் தாஸ் மற்றும் அவரது உத்தரவிபடி பெண் ஐபிஎஸ் அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி. கண்ணன் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இரண்டு ஆண்டுகள் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் அந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அதில், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் குற்றவாளி என கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. மேலும், ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதித்து கோர்ட்டு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

அதேபோல், ராஜேஷ் தாஸ் சொன்னதின் பேரி பெண் ஐபிஎஸ் அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த புகார் கொடுக்க இடைஞ்சல் ஏற்படுத்திய செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி. கண்ணனுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.