பொறியியல் படிப்புக்கான ரேண்டம் எண் வெளியீடு!

பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ரேண்டம் எண்ணை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்.

இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளில் சேருவதற்காக 2,29,165 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 18 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். மொத்தம் தமிழ்நாட்டில் 440 பொறியியல் கல்லூரிகளில் 1.5 லட்சம் இடங்கள் உள்ளன.

இந்த இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். அதற்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்பட்டு இருக்கிறது. மாணவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கும், வீட்டு முகவரிக்கு தகவல்கள் அனுப்பிவைக்கப்படும். மேலும், www.tneaonline.org இணையதளத்தின் மூலமாகவும் ரேண்டம் எண்ணை தெரிந்துகொள்ளலாம்.