மணிப்பூர் கொடுமையை பார்த்து என் இதயம் கனத்து விட்டது- பிரதமர் மோடி.

மணிப்பூர் சம்பவம் நாட்டிற்கே அவமானம் என்றும் குற்ற்றவாளிகள் தப்ப முடியாது என்று பிரதமர் மோடி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், பிரதமர் மோடி இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது , நாடாளுமன்ற கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்; சிறந்த சட்டங்களை உருவாக்க விவாதங்கள் அவசியம்;

இன்று தொடங்கும் கூட்டத்தொடரில் மக்களுக்குப் பயனுள்ள மசோதாக்கள் கொண்டுவரப்பட உள்ளன. ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு மத்திய அரசு தயராக உள்ளது மணிப்பூரில் பெண்களுக்கு நேர்ந்த கொடுமையை என்றும் மன்னிக்க மாட்டோம். மணிப்பூர் சம்பவம் பெரும் வேதனையை கொடுத்துள்ளது, எனது இதயம் கனத்துள்ளது. இந்தியாவின் தாய் மற்றும் சகோதரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் சம்பவம் நாட்டிற்கே அவமானம் என்றும் குற்றறவாளிகள் தப்ப முடியாது” இவ்வாறு அவர் பேசினார்.