மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை படிப்பில் சேர க்யூட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிட்டது NTA!

மத்திய பல்கலைக்கழங்களில் முதுநிலை படிப்பில் சேருவதற்கான க்யூட் நுழைவுத்தேர்வு ஜூன் 5 முதல் 12 வரை நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்திருக்கிறது.

மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை கலை அறிவியல் பட்டப்படிப்புகளில் சேருவதற்கு வருடம்தோறும் க்யூட் நுழைவுத்தேர்வை நடத்தி வருகிறது நேஷனல் டெஸ்ட்டிங் ஏஜென்ஸி.

அதன் அடிப்படையில் 2023 – 2024ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான க்யூட் தேர்வு தேதியினை இப்போது அறிவித்திருக்கிறது நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி.

ஜூன் 5ம் தேதி முதல் 12ம் தேதி வரை க்யூட் தேர்வு இந்தியா முழுவதும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 19ம் தேதிதான் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை மே 5 வரை நீட்டித்துள்ளது என்.டி.ஏ. மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை கலை அறிவியல் பட்டப்படிப்பில் சேர ஆர்வமுள்ள மாணவர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.