மருத்துவப் படிப்புகளுக்கான 2-வது சுற்று கலந்தாய்வு இன்று தொடக்கம்…

தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான இரண்டாவது சுற்று கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான முதல் சுற்று கலந்தாய்வு அண்மையில் நிறைவடைந்தது. இதில், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு சென்னை கிண்டியில் உள்ள உயர் சிறப்பு மருத்துவமனையில் நேரடியாகவும், பொதுப் பிரிவினருக்கு இணையவழியிலும் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, இரண்டாவது சுற்று இணையவழியில் இன்று தொடங்குகிறது.தகுதியான மாணவர்கள், இன்று காலை 10 மணிமுதல் நாளை மறுதினம் மாலை 5 மணிவரை இணையதளங்களில் பதிவுசெய்யலாம் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது

மேலும், 24-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதிவரை இடங்களைத் தேர்வுசெய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 1-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதிவரை கல்லூரிகளில் சேர்வதற்கான ஆணைகளை இணையதளங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.