மருத்துவ துறையை மேம்படுத்த 157 புதிய செவிலியர் கல்லூரிகள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியா முழுவதும் 157 புதிய செவிலியர் கல்லூரிகளை தொடங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது

உலகில் மிக உன்னதமான பணி… செவிலியர் பணி. அதனை வலுப்படுத்தவும் நாட்டில் செவிலியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இந்தியா முழுவதும் சுமார் 157 செவிலியர் கல்லூரிகள் உருவாக்கப்பட இருப்பதாகவும் அதற்காக 1570 கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதற்உ பிரதமர் தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.

இதில் மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், தமிழ்நாட்டில் புதியதாக 11 செவிலியர் கல்லூரிகள் உருவாக இருக்கிறது. திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகப்பட்டினம், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 இடங்களில் புதிய செவிலியர் கல்லூரிகள் அமைய இருக்கிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது மத்திய அரசு.