முதல் போஸ்டிங்கிலேயே லஞ்சம் வாங்கி பிடிபட்ட ஜார்க்கண்ட் பெண் அதிகாரி!

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் மிதாலி சர்மா. இவர் அம்மாநில கூட்டுறவுத்துறையில் உதவிப் பதிவாளராக கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் மிதாலி சர்மா. இவர் அம்மாநில கூட்டுறவுத்துறையில் உதவிப் பதிவாளராக கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தார். இதுதான் அவருக்கு முதல் பணி நியமனம் ஆகும்.

அவர் பணியாற்றி வந்த நிலையில், சமீபத்தில் கோடெர்மா வியாபர் சஹ்யோக் சமிதியில் அவர் சோதனை நடத்தியதாக தெரியவருகிறது. அச்சோதனையில் முறைகேடாக இருந்த சில பொருட்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இந்த முறைகேடு வெளியில் தெரியாமல் இருப்பதற்காக லஞ்சமாக அங்கு இருந்த உள்ளூர் அமைப்பை சேர்த்த ராமேஷ்வர் பிரசாத் யாதவிடம் ரூ.20,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

லஞ்சம் கேட்டதையடுத்து ஏசிபி டிஜியிடம் புகார் அளித்துள்ளார் ரமேஷ்வர். இவரது புகாரின் பேரில் ஹசாரிபாக் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் (ஏசிபி) விசாரணை நடத்தியதில் ரூ. 20,000 கேட்டதை உறுதி செய்யதார் மிதாலி சர்மா. இதற்கு முதல் தவணையாக ஜூலை 7 அன்று ரூ.10,000 பெற்ற போது கையும் களவுமாக கைது செய்தனர்.

மேல் விசாரணைக்காக ஹசாரிபாக்குக்கு அழைத்து சென்றுள்ளனர். இது குறித்த விசாரணையும் நடைபெற்று வருகின்றது. இதற்கிடையே ஜார்க்கண்ட் கூட்டுறவுத்துறை பெண் அதிகாரி லஞ்சம் வாங்கிய வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.