முன்கூட்டியே ரிலீஸ் ஆகும் மாவீரன் – படக்குழு அறிவிப்பு

வருகிற 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது சிவகார்த்தியன் நடிப்பில் மண்டேலா திரைப்பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியாகும் மாவீரன் திரைப்படம்.

யோகிபாபு நடிப்பில் வெளியான மண்டேலா மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்தப் படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இப்போது நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ‘மாவீரன்’ திரைப்படதை இயக்கி வருகிறார்.

இறுதிகட்டத்தில் இருக்கிறது மாவீரன் திரைப்பட பணிகள். இந்நிலையில் திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகுக் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் அந்த நேரத்தில் உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் திரைப்படம் வெளியாவதால், மாவீரன் திரைப்பட ரிலீஸ் தேதியை ஆகஸ்ட் 11ம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டது.

பின்னர், நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகுக் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதனால் மாவீரன் திரைப்படம் வெளியாகும் தேதியை ஜூலை 14ம் தேதிக்கு மாற்றி அறிவித்திருக்கிறது படக்குழு.