சாதாரண குடிமகன் உட்பட மூன்று பேரை விண்வெளிக்கு அனுப்பியிருக்கிறது சீனா.
ரஷ்யா, அமெரிக்காவுக்கு அடுத்து மூன்றாவது நாடாகா விண்வெளிக்கும் அனிதர்களை அனுப்பியிருக்கிறது சீனா. விண்வெளித்துறையில் வளர்ந்து வரும் நாடாக இருக்கும் சீனா கோடிக்கணக்கில் பணத்தை அதில் முதலீடு செய்துள்ளது. உள்ளது.
பூமியில் இருந்து 400 கி.மீ உயர்த்தில் உள்ள சீனாவின் விண்வெளி நிலையமான தியான்ஹேவுக்கு மனிதர்களை அனுப்ப சீனா முடிவு செய்திருந்தது. சீனாவின் ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து நேற்று காலை ஷென்சோ-16 என்ற செயற்கை கோள் அனுப்பப்பட்டது. இது சீனாவின் 4-வது மனித விண்வெளி பயணம் ஆகும். ஆனால் இந்த முறை முதன் முதலாக ஒரு சாதாரண குடிமகன் உள்பட 3 பேர் விண்வெளிக்கு அனுப்பியுள்ளது சீனா.
விண்ணில் பாய்ந்த 10 நிமிடத்தில் ஷென்சோ-16 என்ற செயற்கைக்கோளானது ராக்கெட்டில் இருந்து பிரிந்து சுற்றுப்பாதையில் நுழைந்தது. செயற்கைகோள் ஏவுதல் பணி முழு வெற்றி பெற்றதாகவும், அதில் உள்ள 3 பேரும் நல்ல நிலையில் உள்ளதாகவும் சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த 3 பேரும் 5 மாதங்கள் விண்வெளியில் தங்கி இருந்து ஆய்வு பணி மேற்கொள்வார்கள் என தெரிவித்திருக்கிறது சீன விண்வெளி ஆராய்ச்சி மையம்.