மெட்டா நிறுவனத்திற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் விதித்த ஐரோப்பிய ஒன்றியம்
2020ம் ஆண்டு பேஸ்புக் நிறுவனம் ஐரோப்பிய ஒன்றிய பயனாளர்களின் தகவல்களை அமெரிக்காவுக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ஐரிஷ் டேட்டா புரடக்ஷன் கமிஷன் நடத்திய விசாரணையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதனால், நீதிமன்றத்தின் உத்தரவை மீறி ஐரோப்பிய ஒன்றிய பயனாளர்களின் தகவல்களை அமெரிக்காவிற்கு கொடுத்ததற்கு ஐரோப்பிய டேட்டா புரடக்ஷன் போர்டு பேஸ்புக் என்ற பெயரை மெட்டா என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் மெட்டா நிறுவனத்திற்கு 1.2 பில்லியன் யூரோ, அதாவது இந்திய மதிப்பில் சுமார் 10,761 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
இதுகுறித்து மெட்டா நிறுவனத்தின் சார்பில், “ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த நடவடிக்கை நியாயமற்றது. இந்த முடிவு பிற நிறுவனங்களுக்கு ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நடவடிக்கை மெட்டா நிறுவனத்திற்கு ஏமாற்றமளிக்கிறது.” என்று தெரிவித்துள்ளது.