யூடியூப் வியூஸ்க்காக விமானத்தை விபத்துக்குள்ளாக்கிய யூடியூபர் – 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த அமெரிக்க நீதிமன்றம்

யூடியூப் வியூஸ்க்காக விமானத்தை விபத்துக்குள்ளாக்கிய முன்னாள் விமானியும் இப்போது யூடியூபராகவும் இருந்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் ட்ரெவர் ஜேக்கப்.இவர் முன்னாள் விமான ஓட்டியாக இருந்திருக்கிறார். மேலும் தனியார் விமானங்களை ஓட்டுவதற்கான உரிமமும் பெற்றுள்ளார். கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக ‘Travor Jacob’ என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்துள்ளார்.

அப்போது 2021ம் ஆண்டு ஒரு சிறிய விமானத்தை மலைப்பகுதிகளுக்கு மோதவிட்டு அவர் பாராசூட்டில் தப்பித்து இருக்கிறார். அதனை வீடியோ எடுத்து தன்னுடைய யூடியூப் சேனலில் போட்டுள்ளார். அந்த வீடியோவை 40 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இந்த வீடியோ இப்போது பெரும் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

விமானத்தை விபத்துக்குள்ளாக்கிய காரணத்திற்காக வரை அமெரிக்க காவல்துறை கைது செய்திருக்கிறது. அவரிடம் நடத்திய விசாரணையில், யூடியூப் வியூஸ்க்காக தான் விபத்து ஏற்படுத்தியதாக ஜேக்கப் ஒப்புக்கொள்ள, அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியிருக்கிறது அமெரிக்க நீதிமன்றம்.மேலும் அவருடைய தனியார் விமான ஓட்டும் உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.