ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு குஜராத் உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

ராகுல்காந்தியின் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய முடியாது என சூரத் நீதிமன்றம் உத்தரவளித்திருந்த நிலையில், குஜராத் உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.

மோடி சமூகம் குறித்து முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி அவதூறாக பேசியதாக அவர் மீது சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

அதன் தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதன் காரணமாக சூரத் நீதிமன்றத்தில் தனக்கு வழங்கிய தண்டனையை ரத்து செய்யக்கோரி ராகுல்காந்தி மேல்முறையீடு செய்திருந்தார். ஆனால் சூரத் நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்திருந்தது.

இந்த நிலையில், ராகுல் காந்தி அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை செசன்ஸ் நீதிமன்றம் நிராகரித்தற்கு எதிராக குஜராத் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்த மனுவை குஜராத் நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.

இந்த மனுவை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி கீதா கோபி, விசாரணையில் இருந்து விலகியதால், இந்த மனுவை நீதிபதி ஹேமந்த் பிரச்சக் இன்று விசாரிக்க உள்ளார்.