ரெய்டு போன்ற மிரட்டல் உருட்டல்களுக்கு திமுக எந்நாளும் பணியாது – அமைச்சர் சேகர்பாபு.

ரெய்டு போன்ற மிரட்டல் உருட்டல்களுக்கு திமுக எந்நாளும் பணியாது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

பாரிமுனை, அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை, சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்துள்ள ஆடி மாத அம்மன் திருக்கோயில் ஆன்மிகச் சுற்றுலாவினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (18.07.2023) கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஆடி மாத அம்மன் திருக்கோயில்களுக்கு குறைந்த கட்டணத்தில் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் ஆன்மீக சுற்றுலா செல்ல விரும்புவர்களுக்கு ஏதுவாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில் இன்றைக்கு அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோயிலிலிருந்து 10 அம்மன் திருக்கோயில்களுக்கு புறப்பட்ட ஆன்மிகச் சுற்றுலாவில் 47 பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கு சிறப்பு தரிசனம் செய்யப்பட்டு, திருக்கோயில் பிரசாதங்கள் மற்றும் மதிய உணவும் வழங்கப்படுகிறது. சென்னையில் 2 பயணத்திட்டங்களாக ரூ.1,000/- மற்றும் ரூ.800/- ஆகிய கட்டணங்களில் இச்சுற்றுலா செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் ஒரேநாளில் பல்வேறு அம்மன் திருக்கோயில்களுக்கு சென்று பக்தர்கள் இறை தரிசனம் செய்ய முடியும். ஆளவந்தார் அறக்கட்டளையின் சொத்துக்களை பொறுத்தளவில் இதுவரை எந்த ஒரு தனியாருக்கும் தரப்படவில்லை.

ஆளவந்தாரின் உயிலில் குறிப்பிட்டுள்ளபடி அருள்மிகு தலசயன பெருமாள் திருக்கோயில் மற்றும் திருவிடந்தை, அருள்மிகு நித்திய கல்யாண பெருமாள் திருக்கோயிலுக்கு தேவையான அனைத்து நித்தியப் பணிகளும் செய்யப்பட்டு வருகின்றன. அத்திருக்கோயில்களில் திருப்பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஆளவந்தாரின் சொத்துக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை எடுத்து வருவதோடு,