வனப்பகுதியில் பனிக்கட்டியைச் சாப்பிட்டே இரண்டு நாட்கள் உயிர் வாழ்ந்த 8 வயது சிறுவன்!

அமெரிக்காவில் வனப்பகுதியில் காணாமல் போன 8 வயது சிறுவன் 2 நாட்களாக பசியில் பனியைச் சாப்பிட்டே உயிர் வாழ்ந்ததாக கூறியிருக்கிறார்.

அமெரிக்காவில் வனப்பகுதியில் காணாமல் போன 8 வயது சிறுவன் 2 நாட்களாக பசியில் பனியைச் சாப்பிட்டே உயிர் வாழ்ந்ததாக கூறியிருக்கிறார்.

அமெரிக்கா மிச்சிகன் மாகாணத்தில் போர்கியூபின் என்ற மலைத்தொடரை ஒட்டி 60 ஆயிரம் ஏக்கரில் ஒரு வனப்பகுதி இருக்கிறது. இந்த வனப்பகுதிக்கு பயணிகள் ட்ரெக்கிங் செல்வது வழக்கம். அமெரிக்காவைச் சேர்ந்த 8 வயது சிறுவன் நிண்டே நெய்மி குடும்பத்துடன் வனப்பகுதிக்கு சுற்றுலாவுக்குச் சென்றிருக்கிறான்.

அந்த வனப்பகுதியில் 30 முதல் 40 டிகிரி பனியில் குடும்பத்தினர் அனைவரும் நெருப்பு மூட்டி குளிர்காய்ந்துள்ளனர். அப்போது வனப்பகுதிக்கு அருகே குளிர்காய்வதற்காக மரக்கட்டைகள் எடுத்துவருவதற்கு சென்றிருக்கிறான் சிறுவன் நெய்மி. இரவு 1 மணிக்கு சென்ற சிறுவன் மீண்டு தன்னுடைய இருப்பிடத்திற்கு திரும்பவில்லை.

சிறுவன் காணாமல் போனதால் அவரது தாய் ஜெஸிகா பதற்றமடைந்து உதவிக்கு மீட்பு படையினரை அழைத்திருக்கிறார். ஆனால் எங்கே தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை. தன்னுடைய மகன் உயிருடன் கிடைப்பான் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை என சிறுவனின் தாய் சமூக வலைதளத்தில் பதிவு செய்திருக்கிறார்.

இந்நிலையில் கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் மீட்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தியதில், ஒரு பெரிய மரப்பொந்தில் குளிருக்கு நடுங்கியபடி பதுங்கியிருந்த சிறுவனை மீட்டுள்ளனர். அப்போது சிறுவனிடம் குளிரில் இருந்தும் பசியில் இருந்து எப்படி உன்னை காப்பாற்றிக்கொண்டாய் என கேட்டதற்கு, “உடலில் நீர்சத்து குறைந்துவிடக்கூடாது என்பதற்காகவும் பசியில் இருந்து தப்பிப்பதற்காகவும் பனிக்கட்டிகளை சாப்பிட்டு உயிர்வாழ்ந்தேன்.” என கூறியிருக்கிறான். தன்னுடைய மகன் உயிருடன் கிடைப்பானா மாட்டான என்கிற ஏக்கத்தில் இருந்த தாய் ஜெஸிக்காவுக்கு இப்போது அவருடைய உயிரே மீண்டு வந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்.