இரண்டாவது முறையாக விண்வெளிக்கு செயற்கைகோள் மூலம் வணிக குழுவை அனுப்பியுள்ளது அமெரிக்கா.
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் ஆக்ஸியம் ஸ்பேஸ் எக்ஸ் – 1 என்ற வணிக குழுவை செயற்கைகோள் மூலம் விண்வெளிக்கு அனுப்பிவைத்தது. அதேபோன்று இந்த வருடமும் ஆக்ஸியம் ஸ்பேஸ் எக்ஸ் 2 என்ற வணிக குழுவை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது.
புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு தற்போது வணிக குழுவை அனுப்பி உள்ளது. இந்த குழு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் வகை ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டு உள்ளது. இதில் ஓய்வுபெற்ற நாசா விண்வெளி வீரர் பெக்கி விட்சன், அமெரிக்க பைலட் ஜான் ஷோப்னர், அலி அல்குரானி, ரய்யானா பர்னவி ஆகியோர் சென்றுள்ளனர்.
இந்த வணிக குழு மே 30ம் தேதி கேப் கனாவெரல் விண்வெளி நிலையத்தில் தரை இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.