வெயிட் லாஸ் முதல் ஹேர் லாஸ் வரை… முட்டையில் இத்தனை நன்மைகள் உள்ளதா..?

ஒரு சிலருக்கு முட்டையால் செய்யப்பட்ட உணவுகள் மட்டும் கொடுத்தால் போதும் வெறும் தயிர் சாதம் இருந்தால் கூட சாப்பிட்டு விடுவார்கள். அந்த அளவுக்கு முட்டை பிரியர்கள் ஏராளமானோர் உள்ளனர்.

பலரும் மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு அசைவ உணவு முட்டை. மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் இந்த அசைவ உணவு பல்வேறு ரெசிப்பிகள் தயாரிப்பதற்கு உதவுகிறது. அப்படியான ஒரு ரெசிபி தான் ஆம்லெட். ஒரு சிலருக்கு ஆம்லெட் மட்டும் கொடுத்தால் போதும் வெறும் தயிர் சாதம் இருந்தால் கூட சாப்பிட்டு விடுவார்கள். அந்த அளவுக்கு ஆம்லெட் பிரியர்கள் ஏராளமானோர் உள்ளனர். ஆம்லெட் சுவையாக இருப்பது மட்டுமல்லாமல், இது ஆரோக்கியமான ஒரு உணவாகவும் கருதப்படுகிறது. இந்த பதிவில் ஆம்லெட் சாப்பிடுவதால் நமது உடல் ஆரோக்கியத்திற்கு கிடைக்கக்கூடிய சில பலன்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக அமைகிறது: முட்டையில் நமது உடல் ஆரோக்கியத்திற்காக அத்தியாவசியமான ஒன்பது அமினோ அமிலங்கள் காணப்படுகிறது. அது மட்டுமல்லாமல் முட்டை புரோட்டீனின் சிறந்த ஆதாரமாக அமைகிறது. இதன் காரணமாக இது முடி உதிர்வை தடுத்து, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இது தவிர கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் D போன்ற ஊட்டச்சத்துக்கள் முட்டையில் அதிக அளவில் காணப்படுகிறது.

நரம்புகள் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது: முட்டைகளில் காணப்படும் வைட்டமின் B1 நமது நரம்புகளை பாதுகாப்பதற்கு உதவி புரிகிறது. மேலும் இந்த ஊட்டச்சத்து குளுக்கோஸின் மெட்டபாலிசத்தை மேம்படுத்த உதவுகிறது.

உறுப்புகளுக்கு ஆரோக்கியமான ஆக்சிஜன் கிடைக்க உதவி செய்கிறது: முட்டையில் ஏராளமாக பொதிந்து கிடக்கும் இரும்புச்சத்து ஆரோக்கியமான அதேசமயம் தொடர்ச்சியான ஆக்சிஜன் சப்ளை உடல் உறுப்புகள் அனைத்திற்கும் கிடைப்பதை உறுதி செய்கிறது.

உடல் எடையை குறைக்க உதவுகிறது: உடல் எடையை குறைக்க நினைப்பவர்களும் தாராளமாக முட்டைகளை சாப்பிடலாம். குறைந்த கலோரிகள் கொண்ட முட்டையை சாப்பிட்டவுடன் வயிறு நிரம்பிய உணர்வு உண்டாகிறது. இதன் காரணமாக இது உடல் எடையை குறைப்பதற்கு பெரிதும் கை கொடுக்கிறது.

நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க உதவுகிறது: HDL என்று சொல்லப்படும் நல்ல கொலஸ்ட்ரால் அளவுகளை அதிகரிப்பதற்கு முட்டை ஒரு சிறந்த உணவாக கருதப்படுகிறது. நமது உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கும் பொழுது நமக்கு இதய நோய், பக்கவாதம் மற்றும் பிற உடல்நல பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவதாக ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே நல்ல கொலஸ்ட்ரால் அளவுகளை அதிகரிப்பதற்கு தினமும் ஒன்று முதல் இரண்டு முட்டைகள் சாப்பிடுவது உதவக்கூடும்.

எனவே தாராளமாக நீங்கள் தினமும் ஒன்று முதல் இரண்டு முட்டைகளை சாப்பிடலாம். எனினும், குறிப்பிட்ட சில உடல் நல பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் மருத்துவரை அணுகிய பிறகு முட்டை சாப்பிடலாமா, வேண்டாமா என்பதை முடிவு செய்யலாம்.