வெயில் காலத்தில் உங்கள் சருமத்தை பராமரிக்க எப்போதும் இவற்றை கடைபிடியுங்கள் ..

சரும பராமரிப்புக்கென சில விஷயங்களை நாம் கடைப்பிடிக்கும் போது அது எந்த சீதோஷண நிலையாக இருந்தாலும் நம் சருமத்தை ஆரோக்கியமாக வைக்க வழிவகுக்கும் .

வெயில் காலம் வந்துவிட்டாலே நம் சருமத்தை கொஞ்சம் கூடுதலாகவே பராமரிக்க வேண்டும். ஏனெனில் வெயிலின் தாக்கம் எளிதில் முகப் பொலிவை நீக்கிவிடும். எனவே நீங்கள் வெயில் காலத்திலும் நாள் முழுவதும் ஃபிரெஷாக இருக்க இந்த சருமப் பராமரிப்பு பொருட்களை கட்டாயம் பயன்படுத்துவது அவசியம். அவை என்னென்ன பார்க்கலாம்.

சன்ஸ்கிரீன் : வெயில் காலம் வந்தவுடன் நீங்கள் அவசியம் வாங்கி வைத்து கொள்ள வேண்டிய புராடக்ட் சன்ஸ்கிரீன் லோஷன் போன்றவை தான். வெயிலில் செல்லும்போது தினமும் சன்ஸ்கிரீன் லோஷன் தடவ வேண்டும். சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் மிகவும் வலிமையானவை. எனவே, இதனால் சருமத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க சன்ஸ்கிரீன் மிகவும் அவசியம். இது புற்றுநோய் மற்றும் வயதான தோற்றம் ஆகியவற்றை தடுக்கும். மேலும் எஸ்.பி.எஃப் உள்ள புராடக்ட்களை பயன்படுத்துவது உங்கள் சருமத்திற்கு மிகவும் நல்லது

கிளென்சிங் : கோடை காலத்தில் வியர்வை அதிகம் வருவதால், எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். எனவே உங்கள் தோலை பராமரிக்க கிளென்சரை பயன்படுத்துவது மிகவும் அவசியம். உங்களுக்கு வியர்க்க ஆரம்பிக்கும் போது, உங்கள் தோலில் அழுக்குகளும் நிறைந்திருக்கும். எனவே உங்கள் சருமத்தை கிளென்சரை கொண்டு சுத்தம் செய்வது சிறந்தது. மேலும் நீங்கள் பயன்படுத்தும் கிளென்சரானது அதிக படியான கெமிக்கல்ஸ் இல்லாததாக பார்த்து வாங்குங்கள். நீங்கள் வாரத்திற்கு ஒருமுறையாவது கிளென்சர் பயன்படுத்துவது நல்லது.

டோனர் : வெயிலில் செல்லும் போது முகத்தில் எந்த வித எரிச்சலும் இல்லாமல் இருக்க டோனர் மிக அவசியம். இவை சருமத்தில் உள்ள ph அளவை சீராக வைக்கும். இதனால் உங்கள் முகம் பொலிவாக இருக்கும். அதே போன்று சருமத்தில் எண்ணெயை உற்பத்தி செய்யும் தோல் துளைகளை மூட, ஒரு நல்ல டோனர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ரோஸ் வாட்டர் :ரோஸ் வாட்டர் சருமத்தின் அழகை அதிகரிக்க மட்டுமின்றி, முடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது.ரோஸ் வாட்டரைக் கொண்டு ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் முகத்தை சுத்தப்படுத்தலாம்.தினமும் குளிக்கும்போது அந்த தண்ணீரில் சிறிதளவு இந்த ரோஸ் வாட்டரை கலந்து தினமும் குளித்து வந்தால் சருமத்திற்கு ஒரு நல்ல பொலிவைத் கொடுக்கும். மேலும் கண்களுக்கும் நல்லது. இதனை பஞ்சில் நினைத்து கண்ணில் வைத்தால் குளுமையாக இருக்கும்.