வெறும் ரூ.60 ஆயிரம் முதலீடு செய்து ரூ.45 ஆயிரம் கோடி லாபம் ஈட்டிய பார்லே ஜி நிறுவனத்தின் கதை!

1920களில் வெறும் 60 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொடங்கிய பார்லே ஜி நிறுவனம் இப்போது ரூ.45 ஆயிரம் கோடி லாபம் ஈட்டி வருகிறது. அந்நிறுவனத்தின் வெற்றிக் கதை .

90ஸ் கிட்ஸ்களின் நினைவில் இருந்து என்றும் நீங்காத ஓர் உணவுப்பொருள் என்றால் அது பால்ஜே ஜி பிஸ்கெட்டை சொல்லலாம். குறைந்த விலையில் அனைவரும் வாங்கி சாப்பிடும் விதத்தில் சுவையாக இருந்த அந்தப் பிஸ்கெட்டிற்குப் பின்னால் ஒரு பெரிய கதையே இருக்கிறது.

1920-களில், இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தபோது, ​​ஒரு இந்திய தொழிலதிபராக தனது பெயரை உருவாக்க விரும்பிய குஜராத்தைச் சேர்ந்த மோகன்லால் சௌஹானின் சிந்தனையில் உருவானது தான் பார்லே ஜி. சுதேசி இயக்கத்தின் போது, மோகன்லால் மும்பைக்குச் சென்று சிற்றுண்டி வணிகத்தில் ஈடுபட முடிவு செய்தார்.

தின்பண்டங்களை விற்கத் தொடங்கிய அவர், பிரிட்டிஷ் சிற்றுண்டி நிறுவனங்களால் லாபத்தை இழந்தார். பார்சி சமூகத்தின் உதவியுடன், மோகன்லால் பன்கள், ரொட்டி, ரஸ்க், நான்கதை மற்றும் பிற பேக்கரி பொருட்களை விற்கத் தொடங்கினார்.

பார்லே ஜி நிறுவனருக்கு ஐந்து மகன்கள் இருந்தனர். மானெக்லால், பீதாம்பர், நரோட்டம், காந்திலால் மற்றும் ஜெயந்திலால் ஆகிய ஐவரும் தங்கள் தந்தையின் கடையில் ஒன்றாக வேலை செய்தனர். விரைவில், மோகன்லால் சௌஹான் தனது சேமிப்பான 60,000 ரூபாயை வைத்து, இயந்திரங்களை இறக்குமதி செய்து ஜெர்மன் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்குக் கொண்டுவர முடிவு செய்தார்.

சுதந்திர இந்தியாவில், மோகன்லாலின் பார்லே ஜி, பிரிட்டிஷ் தின்பண்டங்களுக்கு மாற்றாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மலிவான பொருளாக மாறியது. விரைவில், தம்ஸ் அப், கோல்ட் ஸ்பாட், லிம்கா மற்றும் ஃப்ரூட்டி போன்ற குளிர்பானங்களை அறிமுகப்படுத்தி கோகோ கோலாவுக்கு போட்டியைக் கொடுத்தன பார்லே தயாரிப்புகள்.

பார்லே ஜி பிஸ்கட்களின் மலிவான விலை மற்றும் மாறாத சுவை காரணமாக, உலகம் முழுவதும் அதிகம் விற்பனையாகும் பிஸ்கட் என்று 2011 ஆம் ஆண்டில் நீல்சன் அறிக்கை கூறியது. இப்போது பார்லே தயாரிப்புகள் மற்றும் பார்லே ஜி நிறுவனர் மோகன்லால் சவுகானின் பேரன் விஜய் சவுகான் மற்றும் அவரது குடும்பத்தினரால் கையாளப்படுகிறது.

பார்லே தயாரிப்புகளின் வருவாய் இப்போது 2 பில்லியன் டாலர் மதிப்பை எட்டியுள்ளது. தற்போதைய வருவாய் ரூ.16,202 கோடியாக உள்ளது. விஜய் சவுகான் மற்றும் அவரது குடும்பத்தினரின் நிகர மதிப்பு தற்போது 5.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது, அதாவது ரூ.45,238 கோடியாக உள்ளது.